ஒடிசாவில் கனமழை: 27 பேர் பலி - 23 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் மக்கள் பாதிப்பு
புவனேஷ்வர்: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஒடிசா வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
ஒடிசாவில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், அம்மாநிலத்திலுள்ள அனைத்து பிரதான நதிகளிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. 23 மாவட்டங்களில் 1,553 கிராமங்களைச் சேர்ந்த 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பால அம்மாநில சிறப்பு நிவாரண ஆணையர் பி.கே.மொஹபத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

பாதுகாப்பான இடம்...
தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 1.40 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணி...
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் தேசிய பேரிடர் நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த 11 பிரிவினரும் ஒடிஸா பேரிடர் அதிரடிப் படையைச் சேர்ந்த 30 குழுவினரும் நிவாரண, மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர 184 நாட்டுப் படகுகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பலி...
மாநிலம் முழுவதும் வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.

மகாநதியில் தொடர்ந்து சீற்றம்...
கனமழை காரணமாக மகாநதியில் தொடர்ந்து வெள்ளச் சீற்றம் காணப்படுகிறது. அண்டை மாநிலம் சத்தீஸ்கரில் உள்ள அணையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், ஹிராகுட் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் உபரி வெள்ள நீரை வெளியேற்ற அணையின் 50 மதகுகளை அணை அதிகாரிகள் திறந்துவிட்டுள்ளனர்.

முண்டலி தடுப்பணை...
அணையில் இருந்து வெள்ள நீர் திறக்கப்பட்டதையடுத்து, கட்டாக் அருகே நராஜில் அமைந்திருக்கும் முண்டலி தடுப்பணை வழியாக வினாடிக்கு 12 லட்சம் கன அடி நீர் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ள அபாயம்...
இதனால் மகாநதி படுகைப் பகுதியில் மிகுந்த வெள்ளம் ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது. நதிக் கரையோரமுள்ள மாவட்டங்களில் உச்சகட்ட உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு உதவி...
ஒடிஸாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண, மறுவாழ்வு தொடர்பாக அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.

தேசிய பேரிடர் நடவடிக்கைக் குழு...
அப்போது மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய விமானப் படையைச் சேர்ந்த இரு ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், தேசிய பேரிடர் நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த 8 பிரிவுகள் ஏற்கெனவே ஒடிஸாவுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் ராஜ்நாத் தெரிவித்துள்ளார்.

பிரதமருடன் சந்திப்பு...
இது தவிர பிரதமர் நரேந்திர மோடியையும், ராஜ்நாத் சிங்கையும், மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தனித்தனியாகச் சந்தித்து ஒடிஸா வெள்ள நிலைமை குறித்து விளக்கியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications