ஒடிஷா: டுபாக்கூர் சாமியார் சாரதி பாபா கைது- ஆசிரமத்தில் ஏராளமான நிர்வாண புகைப்படங்கள் சிக்கின!!
கட்டாக்: ஒடிஷாவில் கடந்த சில வாரங்களாக பெரும் பரபரப்பை கிளப்பி வந்த டுபாக்கூர் சாமியார் சாரதி பாபா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது ஆசிரமத்தில் இருந்து இளம்பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் ஏராளமாக சிக்கியுள்ளன. அத்துடன் தங்கம், வெள்ளி, ரொக்கப் பணம் என ஏராளமானவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பெண்களை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய புகார்களில் சாரதி பாபா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒடிஷாவின் கேந்திரபாரா மாவட்டத்தின் பாரிமுலா பகுதியில் ஆசிரமம் அமைத்து சுகபோக வாழ்க்கை நடத்திய சாமியார் சாரதி பாபா. அண்மையில் ஹைதராபாத்தில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் மெடிக்கல் மாணவியுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு குத்தாட்டம் போட்டதை உள்ளூர் டிவி சேனல் ரகசியமாக படம்பிடித்து ஒளிபரப்பியது.
இது ஒடிஷாவில் பரபரப்பைக் கிளப்பியது. இந்த சர்ச்சைக்குரிய சாமியாரை கைது செய்து ஆசிரமத்தை இழுத்து மூட வேண்டும் என்று கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் 12 மணிநேரம் சாரதி பாபாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி பின்னர் கைது செய்தனர். அப்போது ஆசிரமத்தில் இருந்து தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இருப்பினும் தம் மீதான புகார் வெடித்த நிலையிலேயே 10க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை எடுத்து சாரதி பாபா பதுக்கி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது ஆசிரமத்தில் இருந்து ஏராளமான இளம்பெண்களில் நிர்வாண புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆசிரமத்துக்கு வரும் இளம்பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே பாத்ரூமில் பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் படம்பிடிக்கப்பட்டவையே இவை அனைத்தும் என தெரியவந்துள்ளது. இந்த இளம்பெண்களை மிரட்டி பாலியல் கொடூரங்களை சாரதி பாபா அரங்கேற்றியதும் அம்பலமாகியது. அவரது ஆசிரமத்தில் இன்னமும் சோதனை நடத்தினால் ஏராளமான தகவல்கள் வரும் என்கின்றனர் ஒடிஷா போலீசார்.
இதனிடையே இந்த டுபாக்கூர் சாரதி பாபாவுக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரி ஃபேஸ்புக்கில் தனியே பக்கம் தொடங்கப்பட்டு பிரசாரமும் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications