புற்றுநோயுடன் போராடிய டிவி நடிகை தீபா சாஹூ மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஓடிசா மாநிலத்தின் டிவி நடிகை தீபா சாஹூ மரணமடைந்துள்ள சம்பவம் டிவி, திரையுல ரசிகர்களை அதிர்ச்சியடைந்துள்ளது. புற்றுநோயுடன் பல ஆண்டுகளாக போராடி சிகிச்சை பெற்று வந்த தீபா இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு
புவனேஸ்வர்: புற்றுநோயுடன் பல நாட்களாக போராடி வந்த ஒடிசா டிவி நடிகை தீபா சாஹூ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 35. நடிகையின் மரணத்திற்கு டிவி, திரையுலக ரசிகர்களும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தீபா சாஹூ ஒடிசாவில் வெளியாகும் மியூசிக் வீடியோக்களில் நடித்து பிரபலமானவர். அவருக்கு கணவரும், 10 வயதான மகளும் இருக்கின்றனர். டிவி சீரியல்கள், சினிமாவிலும் நடித்து வந்த சில மாதங்கள் நடிப்பதை நிறுத்தியிருந்தார். அவரது அம்மாவிற்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை கவனித்துக்கொண்டிருந்தார்.

சில மாதங்களில் தீபாவிற்கும் புற்றுநோய் தாக்கியது. இரண்டு ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்த தீபாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோய் முற்றியது. புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தீபா பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த தீபா சாஹூ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தீபாவின் மரணம் ரசிகர்களையும் திரையுலக பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகையின் உடல் அவரது சொந்த ஊரான தென்காணல் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பலரும் நடிகையின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தீபாவின் மரணம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவரது கணவர் மானிந்திர தத்தா, புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த தீபாவிற்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்து போனதால் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார். 90களில் பிரபலமாக இருந்த தீபாவின் மரணம் ரசிகர்களையும், நடிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications