அச்சு அசல் செய்தி வாசிப்பாளர் போலயே இருக்கே.. முதல் ஏஐ ஆங்கரை அறிமுகப்படுத்திய ஒடிஸா சேனல்
புவனேஸ்வரம்: ஒடிஸாவின் தனியார் டிவி சேனல் ஒன்று முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்துள்ளது.
உலகில் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. இதனால் பல நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. எனவே எதுவாக இருந்தாலும் நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது.

அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் சீனாவில் செய்தி நிறுவனம் ஒன்றும் ஏஐ நியூஸ் ஆங்கரை அறிமுகப்படுத்தியது. Xinhua எனும் அந்த நிறுவனம் ஒரு மெய்நிகர் செயற்கை செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியது.
இதை சீனாவின் sogou நிறுவனம் உருவாக்கியுள்ளது. செயற்கை செய்தி வாசிப்பாளரின் உடல்மொழி தொடங்கி உதடு அசைவுகள், குரல் வரை அனைத்துமே ஏற்கெனவே இருக்கும் செய்தி வாசிப்பாளர்களை ஆராய்ந்து அதை வைத்துத் தானாக உருவகப்படுத்தப்படுகிறது.
செய்திகளை டைப் செய்து கொடுத்தால் போதும் செய்தி வாசிக்கும் வீடியோ கிடைத்துவிடும். ஆங்கில மற்றும் சீன மொழிகளில் இது செய்திகளை வாசிக்கும். செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளருக்கும் நிஜ செய்தி வாசிப்பாளருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அது போல் அமெரிக்காவில் பெண் ஒருவர் ஏஐயால் உருவாக்கப்பட்ட ஆணை திருமணம் செய்து கொண்டார்.
நியூயார்க்கை சேர்ந்தவர் ரோசன்னா ராமோஸ். இவர்தான் அது போல் திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த செயற்கை நுண்ணறிவு ஆண் மருத்துவத் துறையில் இருக்கிறார். இவரது விருப்பத்தின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் மூலம் கணவரை உருவாக்கி இருக்கிறார்.

இப்படியாக உலகில் ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் ஒடிஸாவில் முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை ஒடிஸா டிவி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பெயர் லிசா என வைத்துள்ளது. இந்த செய்தி வாசிப்பாளரால் பல மொழிகளில் பேசும் திறன் உண்டு. ஆங்கிலம் மற்றும் ஒடியா மொழிகளில் செய்திகளை வாசித்து வருகிறார் லிசா.
இதுகுறித்து அந்த தொலைகாட்சி நிறுவனத்தின் தலைவர் லிடிஷா மங்கத் பாண்டா கூறுகையில் ஒடியா மொழியில் லிசாவுக்கு பயிற்சி அளித்தது மிகப் பெரிய கடினமான பணியாகும். எப்படியோ அதில் நாங்கள் சாதித்து விட்டோம். எனினும் அதில் இன்னும் நாங்கள் சில பணிகளை ஆற்றி வருகிறோம். அவர் மற்றவர்களுடன் பேசும் அளவுக்கு அடுத்த லெவலுக்கு செல்ல பயிற்சி கொடுப்போம் என நம்புகிறோம் என்றார்.
ஒடிஸாவில் முதல் டிஜிட்டல் மீடியா ஒடிஸா டெலிவிஷன்தான். இது 1997 ஆம் ஆண்டு புவனேஸ்வர் மற்றும் கட்டாக்கில் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநிலத்தின் முக்கிய நகரங்களில் மெல்ல விஸ்தரிக்கப்பட்டது. கடந்த 2006 ஆம் தேதி கேபிளிலிருந்து சாட்டிலைட் சானலாக மாறியது. இந்த நிறுவனம் 25 ஆண்டுகளாக உள்ளது. லிசாவை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பின்தொடரலாம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications