புது பொண்டாட்டியை காணோம்.. 7 வருஷமாக அலைந்த கணவர்.. கடைசியில் வந்துச்சு பாருங்க டிவிஸ்ட்டு!
7 வருடங்கள் கழித்து காணாமல் போன மனைவியை கணவன் தேடி கண்டுபிடித்தார்
புவனேஷ்வர்: புது பொண்டாட்டியை திடீரென காணவில்லை.. 7 வருஷமாக கஷ்டப்பட்டு அவரை தேடி அலைந்தார் கணவர்.. கடைசியில் அங்கதான் கணவனுக்கு ஒரு ட்விஸ்ட் வைத்தார் புது மனைவி!
ஒடிசாவின் பத்குரா பகுதியில் வசித்து வருபவர் அபய சுடர்... இவருக்கும்,மொகரனா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013, பிப்ரவரி 7ந்தேதி கல்யாணம் ஆனது.
2 மாசம் புது மண தம்பதி இருவரும் சந்தோஷமாக இருந்தார்கள்.. இதற்கு 2 மாசத்திலேயே கல்யாண பெண்ணை காணோம்.. புது பொண்டாட்டியை காணோம் என்று கணவர் பல இடங்களில் தேடினார்.. கண்டுபிடிக்கவே முடியவில்லை.

வரதட்சணை
அதனால் பக்கத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் மனைவி மாயம் என்று புகார் செய்தார்... இவர் புகார் அளித்த உடனேயே, மொகரனாவின் தந்தையும், வரதட்சனைக் கேட்டு கணவர் துன்புறுத்தியதாக ஒரு புகார் தந்தார்... மேலும் மகளை அபயசுடர்தான் கொன்றிருப்பார் என்றும் தன் சந்தேகத்தை கூறினார். இந்த புகார்களை பெற்று கொண்ட போலீசாரும் விசாரணை நடத்தினர்.

ஜாமீன்
பிறகு வரதட்சணை, பெண் மாயம் இவைகளை வைத்து, அபயசுடரை போலீசார் கைது செய்தனர்.. ஜெயிலுக்கும் அனுப்பினர்.. ஒரு மாசத்துக்கு பிறகு அபயசுடர் ஜாமீனில் வெளியே வந்தார்... தப்பே செய்யாத தன்னை இப்படி கைது செய்து ஜெயிலில் உட்கார வைத்துவிட்டார்களே என மனம் புழுங்கினார்.. கைதானதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.

தனித்தனி லிஸ்ட்
அதனால் காணாமல் போன மனைவியை தேட ஆரம்பித்தார்.. அவரை தேடி கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்து, அதற்கு பிறகு தன்னை நிரபராதி என நிரூபிக்க முடிவு செய்தார்.. முதலில் மனைவியின் நண்பர்கள் யார் யார், தொடர்பில் இருந்தவர்கள் யார், யார் என தனித்தனியாக லிஸ்ட் எடுத்தார்.. கல்யாணம் ஆகி 2 மாசத்திலேயே ஓடிவிட்டதால், எப்படியும் பழைய காதல் இருந்திருக்கும், அல்லது நண்பர்களை விசாரித்தால் ஏதாவது விளங்கும் என்று அவர்களை தேடி சென்றார்.

உறவு
அதன்படி சிக்கியும் விட்டார் மனைவி மொகரனா.. அந்த நபருடன்தான் ஆரம்பத்தில் இருந்தே தொடர்பில் இருந்துள்ளார்.. கல்யாணம் ஆகியும் உறவை கைவிட விரும்பவில்லை.. அதனால் கள்ளக்காதலனுடன் ஓடிவந்து, தனியாக குடும்பமும் நடத்தி வருவதை பார்த்துவிட்டார் கணவர்.. இது பற்றி போலீசாருக்கும் தகவல் அளித்தார்.

ராஜீவ் 4
அபய சுடர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று மொகரனாவையும் அவரது கள்ளக்காதலன் ராஜீவ்-வையும் கைது செய்தனர். அப்போது மொகரனா அளித்த வாக்குமூலத்தில், "எனக்கு ஏற்கனவே ராஜீவ் உடன் தொடர்பு இருந்தது.. வீட்டில் எங்கள் காதல் தெரியும்.. ஆனால் என் பெற்றோர் அதை ஏற்க மறுத்தனர்.. இந்த கல்யாணத்தை கட்டாயப்படுத்தி செய்து வைத்தனர். அதனால்தான் 2 மாசத்திலேயே அங்கிருந்து தப்பியோடி வந்துவிட்டேன்.. 7 வருஷமா என் முன்னாள் காதலனுடன்தான் வருகிறேன்.. இப்போ எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன" என்றார். இதை கேட்டு போலீசார் மட்டுமல்ல... அபய சுடரும் விக்கித்து நின்றார்!!
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications