மாவோயிஸ்டுகளின் 'மாவீரர் வாரம்': ஒடிஷாவில் பேருந்து, ரயில் போக்குவரத்து பாதிப்பு- பலத்த பாதுகாப்பு!!
Subscribe to Oneindia Tamil

மாவோயிஸ்டுகள் ஆண்டு தோறும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3-ந் தேதி வரை மாவீரர் வாரத்தை கடைபிடித்து வருகின்றனர். இந்த மாவீரர் வாரத்தின் போது நடைபெறும் நிகழ்வுகளில் ஆந்திரா, சத்தீஸ்கர் மாநில மாவோயிஸ்டுகளும் பங்கேற்பது வழக்கம்.
இதனைத் தொடர்ந்து ஒடிஷா மாநில அரசுப் போக்குவரத்து கழகம், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளுக்கான பேருந்து போக்குவரத்தை முழுமையாக ரத்து செய்துள்ளது. இதேபோல் கோரபுட் மாவட்டத்துக்கான ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஆகஸ்ட் 3-ந் தேதி வரை அரசு அதிகாரிகள் எந்த ஒரு இடத்துக்கும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
மாவோயிஸ்டுகளின் தாக்குதல் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் பி.எஸ்.எப். கோப்ரா உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் பல இடங்களில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications