வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் ஒடிசா மாநில மக்களை திருப்பியழைத்து வர தீவிரம்: நவீன் பட்நாயக்
புவனேஸ்வர்: லாக்டவுன் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் புலம்பெயர்ந்த தங்கள் தொழிலாளர்களை திரும்ப அழைத்துக்கொள்ள மத்திய மற்றும் பிற மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்துவதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
என்னதான், அந்தந்த மாநில அரசுகள், உரிய நடவடிக்கை எடுத்தாலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் நோயாளிகள் உட்பட லட்சக்கணக்கான ஒடியா மக்களின் வாழ்க்கை இயல்பானதாக இருக்காது என்பதை உணர்ந்துள்ளோம், என்று முதல்வர் நவீன் பட்நாயக் வீடியோ செய்தியில் கூறியுள்ளார்.

லாக்டவுன் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும், நாங்கள் மத்திய அரசு மற்றும் பிற மாநில அரசுகளுடன் இதுபற்றி பேசுவோம். ஒடிசாவில் வசிப்பவர்கள் அனைவரும் சீராக, சொந்த மாநிலம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்வோம்.
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பதிவு வசதி இருக்கும். திரும்பி வருபவர்களின் சார்பாக நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பதிவு செய்யலாம். திரும்பி வருபவர்கள் அனைவரும் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு கட்டாயமாக உட்படுத்தப்பட வேண்டும். தனிமைப்படுத்தலை முடித்தவுடன் ஊக்கத்தொகையாக தனிமைப்படுத்தப்பட்ட தங்குமிடம் மற்றும் உணவு ₹ 2,000 இலவசமாக வழங்கப்படும்.
அவர்களின் குடும்பங்கள், சமூகம் மற்றும் மாநிலத்தின் நலன்களுக்கு பதிவு மற்றும் தனிமைப்படுத்தல் முக்கியமானது.
இந்த செயல்முறைகளை மனிதாபிமான அணுகுமுறையுடன் செயல்படுத்த மாநில அரசு ஒரு வரலாற்று முக்கியத்துவமான முடிவை எடுத்துள்ளது. கொரோனா நிலைமையைக் கட்டுப்படுத்த, மாவட்ட ஆட்சியர்களின் அதிகாரம் சர்பஞ்ச்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கிராம பஞ்சாயத்துகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் கொரோனா நிலைமையை நாம் கையாள முடியும். இது மாநிலத்திற்குத் திரும்பும் மக்களுக்கு சேவையை வழங்கவும், நமது போராட்டத்தை வலுப்படுத்தவும் உதவும்.
ஒடிசா மாநிலத்தில் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டன. அனைவரின் ஒத்துழைப்பு மற்றும் தியாகம் காரணமாக இது சாத்தியமானது.
Recommended Video
பஞ்சாயத்து ராஜ் மக்களால் நிர்வகிக்கப்படுகின்றன, எனவே, கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் பஞ்சாயத்துகள் முக்கிய பங்கு வகிக்கும், என்று நவீன் பட்நாயக் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications