என்னங்க கொடூரம் இது? ரயில் விபத்தை விட இது மோசமாக இருக்கே.. ஒடிசாவில் விபத்து நடந்த இடத்தில் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

புவனேஷ்வர்: ஒடிஷா ரயில் விபத்தில் பலியான நபர்களின் உடல்களை அங்கே மீட்பு படையினர் மோசமாக கையாள்வது கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

ஒடிசா ரயில் விபத்து இந்திய ரயில்வே விபத்துகளில் மிகப்பெரிய விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 294 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலி எண்ணிக்கை 400 ஐ தாண்டலாம் என்று கூறப்படுகிறது. 600 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Odisha train accident: Why handling of the bodies getting criticism?

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அங்கே இருந்த சரக்கு ரயிலுடன் கோரமண்டல் ரயில் மோதியதில் அடுத்த சில நிமிடங்களில் பெங்களூர் ரயிலும் மோத பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த நிலையில் ரயில் விபத்தில் பலியான நபர்களின் உடல்களை அங்கே மீட்பு படையினர் மோசமாக கையாள்வது கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. சாதாரண ஸ்ட்ரெச்சர் கூட இல்லாமல் சாக்கு மூட்டையில், தார் பாயில் உடல்கள் கொண்டு செல்லப்படும் அவலம் ஏற்பட்டு உள்ளது.

Odisha train accident: Why handling of the bodies getting criticism?

இன்னொரு பக்கம் பல இடங்களில் உடல்களை லாரி மீது அப்படியே தூக்கி வீசி ஏதோ மூட்டையை கையாள்வது போல கையாளும் கொடூரம் நடந்து உள்ளது. இதெல்லாம் போக இறந்தவர்கள் உடல்களை ஒரே அறைக்குள் குவியல் குவியலாக போட்டு வைத்து இருந்த சம்பவங்களும் நடந்து உள்ளன.

இறந்தவர்களுக்கு உண்டான குறைந்தபட்ச மரியாதையை கூட கொடுக்காமல் மிக மோசமாக அவர்களை நடத்தி உள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளன. அதிலும் இறந்த பெண்கள் உடலில் போற்றுவதற்கு கூட சரியாக துணிகள் கொடுக்கப்படாத சம்பவம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

விபத்தை விட இது பெரிய கொடூரம் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

Odisha train accident: Why handling of the bodies getting criticism?

உயரும் பலி எண்ணிக்கை: கோரமண்டல் ரயில் மூலம் சென்னை வர முன்பதிவு செய்திருந்தவர்கள் எண்ணிக்கை 869 பேர் ஆகும். இதனால் பலி எண்ணிக்கை, காயம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது மிக முக்கிய ரயில் என்பதால் பலர் இதில் தினமும் பயணம் செய்வார்கள்.

இங்கே முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்தவர்கள் விவரங்கள் கிடைக்கவில்லை என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் வாய்ப்புகள் உள்ளன.அங்கே இரவு முழுக்க அள்ள அள்ள உடல்கள் வந்துள்ளன.

முதலில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்தான் விபத்தில் சிக்கி உள்ளது. அதன்படி இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் உள்ள பாலேஸ்வர் வந்த போது அங்கே இருந்த மெயின் ரயில்வே தண்டவாளத்தில் ரயிலை கொண்டு செல்ல கிரீன் சிக்னல் கொடுத்துள்ளனர்.

ரயில் கடந்த பின் சில நொடிகளில் அதை சிவப்பாக்கி உள்ளனர். அதாவது சிக்னல் கொடுத்தவர் தவறுதலாக கொடுத்துவிட்டு மாற்றி இருக்கலாம். அல்லது வேண்டுமென்றே செய்து இருக்கலாம். அல்லது தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம்.

சிவப்பாக விளக்கு மாறியதை கவனிக்காமல் கோரமண்டல் முன்னோக்கி சென்றுள்ளது. அந்த பாதையில் இருந்த சரக்கு ரயிலில் கோரமண்டல் ரயில் மோதி விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இதன் 10-12 பெட்டிகள் ஒடிசாவில் உள்ள பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன.

இந்த நேரத்தில்தான் 20 நிமிடம் கழித்து, பெங்களூர் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அருகில் இருந்த தடத்தில் வந்துள்ளது. அந்த தடத்தில் இருந்த தடம் புரண்ட பெட்டிகள் மீது பெங்களூர் ரயில் மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+