பாலியல் புகாரை வாபஸ் பெற மறுத்த ஆசிரியை தீ வைத்து எரிப்பு: பள்ளி ஆய்வாளர் தலைமறைவு
புவனேஸ்வர்: பாலியல் புகாரை வாபஸ் பெற மறுத்த ஆசிரியை தீ வைத்து எரிக்கப் பட்ட சம்பவத்தில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான பள்ளி ஆய்வாளரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றும் 27 வயது ஆசிரியை ஒருவருக்கு பள்ளி ஆய்வாளர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து ஆசிரியை அளித்த புகாருக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் கடந்த ஞாயிறன்று இரவு ஆசிரியையை புகாரை வாபஸ் பெறச் சொல்லி மிரட்டியுள்ளனர் குற்றவாளிகள். அதற்கு ஆசிரியை மறுப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த குற்றவாளிகள் அவரை தீ வைத்து எரித்து விட்டனர்.
இதில், 90 சதவீத தீக்காயம் அடைந்த அந்த ஆசிரியை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப் பட்ட முக்கிய குற்றவாளியான பள்ளி ஆய்வாளர் தலைமறைவாகி விட்டதால், அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், புகாரை குறித்து நடவடிக்கை எடுக்காத உதவி சப்-இன்ஸ்பெக்டர் உட்பட பள்ளி ஆய்வாளர், மாவட்டக் கல்வி ஆய்வாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications