பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை என்ன செய்ய போகிறது தெரியுமா ஆர்.பி.ஐ?
செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாற்றப் போவதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
டெல்லி: திரும்பப்பெறப்படும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு அவை மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதையடுத்து புதிய ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு கொண்டு வரப்பட்டு மக்களிடம் இருந்து பழைய நோட்டுகளை பெற்று புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மக்களிடம் இருந்து பெறப்படும், செல்லாத 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு விளக்கமளித்துள்ள ரிசர்வ் வங்கி பழைய நோட்டுகள் புணரமைக்க முடியாத அளவுக்கு அழிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் திரும்பப்பெறப்படும் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ட்ரக்குகளில் ஓரிடத்துக்கு கொண்டுவரப்படும்.
அவை துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஈர மூரட்டப்படும் என்றும் பின்னர் கட்டிகளாக மாற்றப்பட்டு அவை ஒப்பந்ததாரர்களிடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கட்டிகள் ஒப்பந்தகாரர்களிடம் வழங்கப்பட்டு நிலத்தை நிரப்பும் பணிக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரே கட்டமாக முடியாது என்றும் பல கட்டங்களாக இதனை செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இநதியாவில் கடந்த மார்ச் மாதம் மொத்தம் 15, 707 மில்லியன் 500 ரூபாய் நோட்டுகளும் 6,326 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications