For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேலை உடுத்தி காளி கோவிலில் 'சில்வர் ஸ்டார்' சிந்து சிறப்பு பூஜை

By Siva
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஹைதராபாத்தில் உள்ள காளி கோவிலில் சிறப்பு பூஜை செய்தார்.

ரியோடி ஜெனீரோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஹைதராபாத்தை சேர்ந்த பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தார். இந்நிலையில் சிந்து காளி கோவிலுக்கு சென்று கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

காளி கோவில்

காளி கோவில்

ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான சிம்ஹவாஹினி மகான்காளி கோவிலுக்கு சனிக்கிழமை சென்றார் பி.வி. சிந்து. வெள்ளை நிற புடவை அணிந்து தலையில் காளி சிலையை சுமந்தபடி கோவிலுக்கு சென்றார்.

சிந்து

சிந்து

காளி சிலையுடன் வந்த சிந்துவுக்கு கோவில் நிர்வாகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சிந்துவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரார்த்தனை

பிரார்த்தனை

தனக்கு வெற்றி கிடைத்ததற்காக சிந்து காளிக்கு நன்றி தெரிவித்து சிறப்பு பூஜை நடத்தினார். காளியின் ஆசியை பெற்றதுடன், அனைவரின் நலனுக்காகவும் வேண்டிக் கொண்டதாக சிந்து தெரிவித்தார்.

பக்தி

பக்தி

சிந்துவின் பெற்றோரான பிவி ரமணா மற்றும் பி. விஜயா ஆகியோருக்கு கடவுள் பக்தி அதிகம். அவர்கள் அடிக்கடி கோவில்களுக்கு சென்று வரும் நிலையில் சிந்துவும் கோவில்களுக்கு செல்கிறார்.

English summary
Olympic sliver medallist PV Sindhu visited famous Kali temple in Hyderabad on saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X