முல்லைப் பெரியாறில் புதிய அணைக்கு அனுமதி தர வேண்டும்... மோடியிடம் உம்மன்சாண்டி மீண்டும் வலியுறுத்தல்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேரளா முதல்வர் உம்மன்சாண்டி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தற்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது.

இதனால் அணையின் சில மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. பின்னர் இது நிறுத்தப்பட்டது. தற்போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மீண்டும் எந்த நேரத்திலும் நீர் திறக்கப்படலாம் என்பதால் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கேரளா வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை நேற்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முதல்வர் உம்மன்சாண்டி சந்தித்து பேசினார். அப்போது முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்று உம்மன்சாண்டி வலியுறுத்தினார். அத்துடன் தமிழக முதல்வருடனான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
கடந்த வாரம் டெல்லி சென்ற உம்மன்சாண்டி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இதே கோரிக்கையை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications