ஆசியாவில் 10-ல் ஒரு ஆண் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகிறார்
மும்பை: ஆசியாவில் 10ல் ஒரு ஆண் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர் என ஐ.நா சபை மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
ஆசியாவை சேர்ந்த வங்காளதேசம், சீனா, கம்போடியா, இந்தோனேஷியா, பப்புவா நியூ கினியா, இலங்கை என 6 நாடுகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
கடந்த ஜனவரி 2011-டிசம்பர் 2012 வரையில் சுமார் 10,178 ஆண்களிடம் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் ஒன்பது இடங்களில் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அவற்றில், கற்பழிப்பு என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை.

உறவில் ஈடுபாடு
உங்களது மனைவி அல்லது பெண் நண்பர் செக்ஸ் விருப்பம் இல்லாவிட்டாலும் அவர்கள் ஏற்று கொள்வார்கள் என்று கருதி செக்ஸில் ஈடுபட்டதுண்டா? என ஒரு கேள்வி இருந்தது.

சிறுமியை பலாத்காரம்
அதிக போதையில் அல்லது அதிகமாக குடித்திருக்கும்போது, ஒரு பெண் அல்லது சிறுமி, அவள் விரும்புகிறாளா அல்லது இல்லையா என்பதை தெரிவிக்க இயலாத நிலையில், நீங்கள் செக்சில் ஈடுபட்டதுண்டா? என மற்றொரு கேள்வி இருந்தது.

வலுக்கட்டாய உறவு
இக்கேள்விகளுக்கு பதிலளித்தவர்களில், பப்புவா நியூ கினியாவை சேர்ந்த 10ல் 6 பேர் வலுக்கட்டாயமாக ஒரு பெண்ணை செக்சிற்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கையில்
இது வங்காளதேசத்தின் நகர்ப்புறங்களில் மிக குறைந்த அளவாக 10ல் ஒருவருக்கும் கீழ் என்றும் இலங்கையில் 10ல் ஒருவருக்கு மேல் என்றும் உள்ளனர்.

5ல் ஒருவர் பலாத்காரம்
அதுவே, கம்போடியா, சீனா மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் 5ல் ஒருவர் என்ற அளவில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

நெருங்கிய உறவுகள்
ஆய்வில் 24 சதவீதத்தினர் நெருங்கிய உறவுகளை பலாத்காரமாக ஈடுபடுவதாகவும், இது வங்காளதேசத்தில் 13 சதவீதமாகவும் மற்றும் பப்புவா நியூ கினியாவில் 59 சதவீதமாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெண் தோழியர்
நெருங்கிய உறவுகள் என கருதப்படும் மனைவி மற்றும் பெண் தோழியரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டவர்களில் 4ல் ஒரு பங்கினர் தெரிவித்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications