உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு பாஜக தலைவர் சுட்டுக்கொலை
முசாபர்நகர்: உத்தர பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு பாஜக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரு தினங்களுக்கு முன்புதான் பாஜக தலைவர் ஒருவர் அம்மாநிலத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் தொடரும் அரசியல் கொலைகளால் அம்மாநில பாஜகவினர் அச்சத்திலுள்ளனர்.
உத்தரபிரதேசத்தின், முசாபர்நகர் மாவட்டம் மிராப்பூர் நகரத்தின் பாஜக துணை தலைவராக இருந்தவர் ஓம்வீர் (40). இன்று காலை தனது வீட்டில் இருந்து தோட்டத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். பைக்கில் வந்த 2 கொலையாளிகள் ஓம்வீரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் குண்டுகள் உடலில் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஓம்வீர் அதே இடத்தில் பலியானார். முன்னதாக தனது பாதுகாப்புக்கு வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து கொலையாளிகளை நோக்கி சுட்டுள்ளார். ஆனால் கொலையாளிகள் தப்பிவிட்டதாக தெரிகிறது.
கடந்த இருதினங்களுக்கு முன்பு பாஜக தலைவர் விஜய் பண்டிட் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, பாஜகவினர் ஆர்ப்பாட்டங்களை நடத்திவந்தனர். இந்நிலையில் இன்று மற்றொரு உள்ளூர் பாஜக தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது உ.பி பாஜகவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications