ஜம்மு காஷ்மீரில் ஷாக்.. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் மேலும் ஒரு வீரர் உயிரிழப்பு
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது மாயமான ராணுவ வீரர் உயிரிழந்து விட்டதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஒன்றாக உள்ளது. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் நிறைந்த இப்பகுதியில் ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதும், ரோந்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இங்கு அடிக்கடி பயங்கரவாதிகளுக்கும், நம் ராணுவ வீரர்கள் இடையே மோதல் சம்பவங்கள் நடைபெறும்.

இந்த நிலையில் நேற்று முன் தினம், ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் அனந்த்நாக் மாவட்டம் கோகெர்நாக் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இரு தரப்பினரிடையே நீடித்த இந்த தாக்குதலில் நம் வீரர்கள் மூன்று பேர் வீரமரணம் அடைந்தனர்.
அதில் ஒருவர் ராணுவ கர்னல் மன்பிரீத் சிங். மற்றொருவர் மேஜர் ஆஷிஷ். இவர்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காஷ்மீர் காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் ஹுமாயுன் பட்டும் பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகி உள்ளார். ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான என்கவுன்ட்டர் 3-வது நாளை எட்டியுள்ள நிலையில், பயங்கரவாதிகளின் பதுங்கிடத்தைக் கண்டறிய ட்ரோன்களை ராணுவம் களமிறக்கியிருக்கிறது.
அதுமட்டும் இன்றி ட்ரோன் தகவல்களின்படி பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக சந்தேகப்படும் இடங்களில் பீரங்கிக் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியும் வருகிறது. இதனிடையே, அனந்த்நாக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் மேலும் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். நேற்று முதல் ராணுவ வீரர் மாயமாகியிருந்த நிலையில், அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இந்த நிலையில், அனந்தாக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது ராணுவ வீரர் உயிரிழந்து இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக அனந்தநாக்கில் பயங்கரவாதிகளின் பதுங்கிடங்குகள் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பயங்கரவாதிகளும் கையெறி குண்டுகளை வீசி தாக்கியதால் இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர சண்டை நீடித்தது. இந்த நிலையில், தான் மேலும் ஒரு வீரர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications