மே.வங்கம்: மேலும் ஒரு திரிணாமுல் எம்.எல்.ஏ. ராஜினாமா -24 மணிநேரத்தில் மமதாவுக்கு 4-வது 'ஷாக்'
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உத்தகர்கந்தி எம்.எல்.ஏ. பன்சாரி மெய்தியும் எம்.எல்.ஏ. பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
மேற்கு வங்க சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுடன் மேற்கு வங்கமும் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பிளவுபடுத்துவதில் பாஜக படுமுனைப்பாக உள்ளது. திரிணாமுல் எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரி தொடங்கி வைத்த கலகக் குரல் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
கடந்த 24 மணிநேரமாக அடுத்தடுத்து திரிணாமுல் எம்.எல்.ஏக்கள் பதவி ராஜினாமா செய்வதும் கட்சியில் இருந்து வெளியேறுவதும் தொடருகிறது. சுவேந்து அதிகாரி, ஜிதேந்திர திவா, சிபந்தர தத்தா ஆகிய எம்.எல்.ஏக்களைத் தொடர்ந்து மற்றொரு எம்.எல்.ஏ. பன்சாரி மெய்தி இன்று இரவு ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பன்சாரி மெய்தி விலகியுள்ளார். 24 மணிநேரத்தில் ராஜினாமா செய்திருக்கும் 4-வது திரிணாமுல் காங். எம்.எல்.ஏ. பன்சாரி மெய்தி. திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகியவர்கள் அனைவரும் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா முன்னிலையில் நாளை பாஜகவில் ஐக்கியமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications