ஒரு மகன் விபத்தில் பலியானான், மற்றொருவனை புலி கொன்றுவிட்டதே: தாய் கண்ணீர்
டெல்லி: எனது ஒரு மகன் விபத்தில் பலியானான், மற்றொருவனை வெள்ளை புலி கொன்றுவிட்டது என்று டெல்லி விலங்கியல் பூங்காவில் பலியான வாலிபர் மக்சூதின் தாய் இஸ்ரத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் மெஹ்பூஸ். அவரது மனைவி இஸ்ரத். அவர்களுக்கு மஹ்மூத், மக்சூத் உள்பட 3 மகன்கள். அதில் மூன்றாவது மகன் இரண்டு வயது இருக்கையில் சாலை விபத்தில் பலியானார். இதையடுத்து கணவரை பிரிந்த இஸ்ரத் மகன்களுடன் டெல்லிக்கு வந்தார். டெல்லிக்கு வந்த இடத்தில் அவருக்கும் பர்தேசி என்பவருக்கும் இடையே உறவு ஏற்பட்டது.

தற்போது பர்தேசியுடன் வாழும் இஸ்ரத்தின் மூத்த மகன் மஹ்மூத் ஜெய்பூரில் வேலை பார்க்கிறார். 2வது மகன் மக்சூத் டெல்லியில் கூலி வேலை பார்த்து வந்தார். அவர் வேலை பார்த்த பணம் ரூ.1,000 ரொக்கத்தை இஸ்ரத் மக்சூதிடம் அளிக்க அவர் டெல்லி விலங்கியல் பூங்காவுக்கு சென்றார். அங்கு அவரை வெள்ளை புலி விஜய் கொன்றது.
இந்த தகவல் அறிந்த மஹ்மூத் டெல்லி விரைந்தார். கொல்கத்தாவில் இருக்கும் மக்சூதின் மனைவி பாத்திமா 7 மாத கர்ப்பிணி ஆவார். தனது கணவர் கொல்லப்பட்ட உடன் அவர் டெல்லிக்கு விரைந்து வந்தார். மக்சூதுக்கு இந்தியா கேட், ஜும்மா மஸ்ஜித் மற்றும் விலங்கியல் பூங்காவுக்கு செல்வது என்றால் பிடிக்கும் என இஸ்ரத் தெரிவித்தார்.
மக்சூதின் மனைவி பாத்திமா கூறுகையில்,
மக்சூதின் தாய் கொல்கத்தாவில் வசிக்கையில் அவரும், என் தாயும் தோழிகள். கடந்த 2012ம் ஆண்டு மக்சூதுக்கு என்னை பெண் கேட்டார் இஸ்ரத். எங்கள் குடும்பத்தார் 2012ம் ஆண்டு மே மாதம் அஜ்மீர் தர்காவுக்கு சென்ற பிறகு எங்களுக்கு டெல்லியில் திருமணம் ஆனது என்றார்.
ஒரு மகன் விபத்தில் பலியானான், மற்றொரு மகன் புலியால் கொல்லப்பட்டான் என்று கூறி அழுதார் இஸ்ரத்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications