ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையானதை கண்டுபிடிப்பது எப்படி? உஷாரா இருங்க.. ஆய்வில் வெளிவந்த தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்லைன் ஷாப்பிங்கில் தொடர்ச்சியாக ஈடுபடுவோருக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிப்பதாக ஆய்வு முடிவுகள் மூலமாகத் தெரிய வந்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையானவர்களை மருத்துவத் துறையில், ஓஎஸ்ஏ என்று வகைப்படுத்தி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிய வந்துள்ளது.

அண்மையில் மின்கென்சி நிறுவன ஆய்வறிக்கையில் இந்தியாவின் ஆன்லைன் ஷாப்பிங் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இணையதளத்தைப் பயன்படுத்தும் 850 மில்லியன் மக்களில் 20 முதல் 25 சதவிகித ஆன்லைனில் பொருள் வாங்குவதாகத் தெரிய வந்துள்ளது. இதனால் இந்தியாவில் நவீனக் காலத்திற்கு ஏற்ப மக்கள் மாற்றத்தை ஏற்று வருவதாக பார்க்கப்படுகிறது.

Online Shopping Addiction

கடைகளுக்குச் சென்று ஷாப்பிங் செய்வதை விட ஆன்லைன் மூலமாக ஷாப்பிங் செய்வது எளிதாகவும், நேரத்தை மிச்சப்படுத்துவதாக இருப்பதாகப் பலரும் கூறி வருகின்றன. அதேபோல் டெலிவரி செய்வதற்கும் ஏராளமான நிறுவனங்கள் வந்துவிட்டபடியால், அத்தியாவசிய பொருட்களைக் கூட மக்கள் ஆன்லைன் மூலமாக வாங்கி வருகின்றனர்.

இன்னொரு பக்கம் எதிர்காலத்திற்குத் தேவையான பொருட்களைப் பார்த்து ஆன்லைனில் ஆட் டூ கார்ட் என்று போடுவது ஒரு பழக்கமாக மாறி வருகிறது. இந்த நிலையில் ஆய்வு ஒன்றில், ஆன்லைன் ஷாப்பிங் செய்வது உடல் நலன் மற்றும் மன நலனை பாதிக்கும் என்று தெரிய வந்துள்ளது. அதாவது அதிகளவில் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையானவர்களை மருத்துவமனையில், ஓஎஸ்ஏ என்று வகைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதாவது ஆன்லைன் ஷாப்பிற்கு அடிமையாகுதல் என்று மருத்துவத் துறையில் என்று தனியாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் அன்லைன் ஷாப்பிற்கு அடிமையானவர்கள், தினமும் ஆன்லைனில் ஆர்டர் போடுவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள், ஆர்டர் போடவில்லை என்றால் அவர்களுக்குத் தூக்கம் வராது என்ற நிலையில் இருப்பவர்கள் என்ற அடிமைத்தனத்தில் இருந்து வெளியில் வர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த ஆன்லைன் ஷாப்பிற்கு அடிமையானதை கண்டுபிடிப்பதற்கு சில வழிகள் உள்ளன. அதாவது அந்த நபர்களுக்கு கவலை அதிகரிக்கும் என்றும், மனச்சோர்வுடன் இருப்பார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. அதேபோல் காசு செலவு செய்வது குறித்த கவலை அதிகரிக்கும். இறுதியாக அவர்கள் மீதே குற்ற உணர்வு ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் எப்போது மன அழுத்தம், சலிப்பு உள்ளிட்ட எண்ணங்களுடன் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மொபைல் அல்லது லேப்டாப் மூலமாக நீண்ட நேரம் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஈடுபடுவோருக்குக் கழுத்து வலி, முதுகு வலி, கால் வலி உள்ளிட்ட பிரச்சனைகள் வரலாம் என்றும் ஆய்வு கூறப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் தரப்பில், முதலில் அவசரத் தேவைக்கு மட்டும் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஈடுபட அறிவுறுத்துகின்றன. முடிந்த வரை அலுவலகம் சென்றுவிட்டு வரும் போதும், ஓய்வு நேரங்களில் நேரடியாகச் சென்று ஷாப்பிங் செய்ய வலியுறுத்துகின்றன.

அதேபோல் உணவுப் பொருட்களை வாங்க நேரடியாகச் செல்வதை வழக்கமாக்கி கொள்ளவும், பட்ஜெட் போட்டு ஆன்லைன் ஷாப்பிங்கில் ஈடுபடவும் கூறுகின்றனர். அதேபோல் ஆட் டூ கார்ட்டில் இணைத்துவிட்டு, சில நாட்களுக்குப் பின் மீண்டும் ஒரு தேவையா என்று ஆலோசித்துவிட்டு ஆர்டர் போடவும் அறிவுறுத்தி வருகின்றனர். இப்படியான விஷயங்களை பின் தொடர்வதன் மூலமாக, ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையாவதில் இருந்து தப்ப முடியும் என்றும் தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+