For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஆபரேஷன் அதிகாரி".. தூண்டில் போட்டு திமிங்கலத்தை தூக்கிய அமித் ஷா.. மம்தாவை அதிர வைத்த ஒரு குடும்பம்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி எல்லாமுமாக நம்பி இருந்த ஒரு குடும்பம்.. மொத்தமாக பாஜக பக்கம் தாவ போகிறது. மம்தாவின் இடது கை என்று கருதப்பட்ட பவர்புல் குடும்பம் திரிணாமுலை கலங்க வைத்து இருப்பதுதான் மேற்கு வங்கத்தில் இப்போது டாப் நியூஸ்!

மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டசபை தேர்தல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல். பாஜகவிற்கோ .. இப்போது இல்லையென்றாலும் எப்போதாவது மேற்கு வங்கம் நமக்குத்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்தால் மலை என்று களமிறங்கும் தேர்தல்.

கருத்து கணிப்புகள் எல்லாம் மம்தாதான் மீண்டும் முதல்வர் என்று கூறினாலும்.. பாஜக எப்போது வேண்டுமானாலும் ஷாக் கொடுக்கும் என்று களநிலவரம் சொல்கிறது. இதனால் மம்தாவும் மிகவும் கவனமாக காய் நகர்த்தி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் மம்தாவை ஒரு அரசியல் குடும்பம் அங்கு ஆட்டிப்படைத்து வருகிறது.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் இருக்கும் அதிகாரி குடும்பம் என்பது அதிக சக்தி கொண்ட அரசியல் குடும்பம் ஆகும். திரிணாமுல் காங்கிரசை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த குடும்பம்தான் அதிகாரி குடும்பம். அப்பா சிசிர் அதிகாரி, அவரின் மகன் சுவேண்டு அதிகாரி, இன்னொரு மகன் தீப்யாந்து அதிகாரி மற்றும் சவ்மெண்டு அதிகாரி என்று நான்கு அதிகாரிகளும் திரிணாமுல் காங்கிரசில் அதிக பலம் வாய்ந்தவர்கள்.

சுவேண்டு

சுவேண்டு

இதில் சுவேண்டுதான் மம்தாவின் இடதுகை போல செயல்பட்டு வந்தார். திரிணாமுல் அமைச்சராக இருந்த இவர்
மம்தாவின் மாஸ்டர் மைண்ட் போல செயல்பட்டு வந்தார். ஆனால் திடீர் திருப்பமாக கடந்த டிசம்பர் மாதம் பாஜகவின் கூட்டத்தில் கலந்து கொண்டவர், அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். ஆம் மம்தா அதிகம் நம்பிய சுவேண்டு அதிகாரி பாஜகவில் இணைந்தார்.. இதுவே திரிணாமுல் காங்கிரசை உடைத்து போட்டது.

சிக்கல்

சிக்கல்

கூடுதல் ஷாக்காக மம்தா போட்டியிடும் அதே தொகுதியில் சுவேண்டு அதிகாரி களமிறங்கி உள்ளார். மம்தாவை அவரின் சொந்த தொகுதியான நந்திகிராம் தொகுதியிலேயே பாஜக சார்பாக களமிறங்கி சுவேண்டு எதிர்கொள்கிறார். இதுவரை நடந்ததை எல்லாம் மம்தா பொறுத்துக்கொண்டார்.. ஆனால் இதற்கு பின் நடந்த சில திருப்பங்கள்தான் மொத்தமாக மம்தாவை முடக்கி உள்ளது.

இணைப்பு

இணைப்பு

சுவேண்டு பாஜகவில் இணைந்து சில நிமிடங்களில் அவரின் தம்பி சவ்மெண்டு அதிகாரியும் பாஜகவில் சேர்ந்தார். ஒரே குடும்பத்தில் ரெண்டு விக்கெட் காலியான நிலையில் மீதம் உள்ள இரண்டு விக்கெட்டும் இன்று காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரிணாமுல் கட்சியின் மூத்த உறுப்பினர், அதிகாரி குடும்பத்தின் தலைவர் சிசிர் அதிகாரி இன்று பாஜகவின் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

எம்பி

எம்பி

தற்போது திரிணாமுல் எம்பியாக இருக்கும் இவர் பாஜக இன்று நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதனால் இவரும் இன்று பாஜகவில் சேர்வார் என்கிறார்கள். திரிணாமுல் காங்கிரசின் மிக முக்கியமான தலைவர் ஆவார் இவர். இன்னொரு பக்கம் அதிகாரி குடும்பத்தின் இன்னொரு திரிணாமுல் எம்பி தீப்யாந்து அதிகாரியும் பாஜக கூட்டத்திற்கு செல்கிறார்.

 அழைப்பு

அழைப்பு

இதற்காக பாஜக தலைவர்களை நேற்றே அதிகாரி குடும்பம் சந்தித்தது. சுவேண்டு அதிகாரி என்ற ஒரு தூண்டிலை வைத்து அவரின் அப்பா திமிங்கலம் தொடங்கி மொத்த அதிகாரி குடும்பத்தையும் பாஜக கொக்கி போட்டு தூக்கி உள்ளது. திரிணாமுல் காங்கிரசில் இவர்களுக்கு ஆதரவாக நிறைய எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் அவர்களும் மொத்தமாக பாஜகவிற்கு தாவ போகிறார்கள் என்கிறார்கள்.

டிசம்பர்

டிசம்பர்

கடந்த டிசம்பரில் டஜன் கணக்கில் பாஜகவில் திரிணாமுல் கட்சியினர் இணைந்தனர். தற்போது மொத்த அதிகாரி குடும்பமும் மம்தாவிற்கு டாட்டா காட்ட போகிறது. இதில் சுவேண்டு அதிகாரியை முதல்வராக முன்னிறுத்த பாஜக பிளான் போட்டு வருகிறதாம். பாஜகவின் மேற்கு வங்க முகமாக இந்த அதிகாரி குடும்பம் மாற போவதாக தகவல்கள் வருகின்றன.

English summary
Operation Adhigari: The whole Suvendu family may move to BJP from Trinamool Congress today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X