தலைக்கு மேல் எகிறும் செலவு.. சட்டென முக்கிய முடிவு எடுத்த டிரம்ப்! மத்திய கிழக்கு முழுசா நாசமாகுது!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈரானுடன் சண்டைக்கு சென்றிருக்கும் அமெரிக்கா, ஏராளமாக செலவு செய்திருக்கிறது. இந்நிலையில் இந்த செலவுகளை ஈடுகட்ட ஆயுத விற்பனையை டிரம்ப் கையில் எடுத்திக்கிறார். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பில்லியன் டாலர் கணக்கில் ஆயுதங்களை விற்க முடிவெடுத்திருக்கிறார்.

ஈரான் ஒன்னும் லேசுபட்ட கை கிடையாது. பார்க்கதான் ஏதோ அப்படி இப்படி இருப்பதை போல தெரியும். ஆனால், போர் என வந்துவிட்டால்.. வேலையை காட்டிவிடும். அப்படித்தான் அமெரிக்காவுக்கு தண்ணி காட்டி வருகிறது.

Trump

ஈரான் அனுப்பும் ஏவுகணைகளின் விலை சில லட்சம்தான். ஆனால், அதை இடைமறித்து தாக்க அழிக்க பயன்படுத்தும் ஆயுதத்திற்கு அமெரிக்கா பல கோடிகளை செலவு செய்கிறது. மறுபுறம் அமெரிக்காவின் ஆயுத உற்பத்தி அவ்வளவு வேகமானது கிடையாது. முழு சோம்பேறி.. வருசத்துக்கு கொஞ்சம் ஆயுதங்களைதான் அமெரிக்கா உற்பத்தி செய்யும். அதுவும் இப்போ போரில் காலியாகிவிட்டது. மீண்டும் உற்பத்தி செய்ய ரொம்ப பணம் தேவை.

எனவே நிதியை ரெடி செய்ய.. தற்போது ஆயுத விற்பனையில் இறங்கியிருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், சுமார் 8.6 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.81,623 கோடி) மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இதற்காக நாடாளுமன்றத்தின் ஆய்வுக் குழுவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்காமல், அவசரக்கால அதிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதுதான். தற்போதைய சூழல் மிகவும் நெருக்கடியானது என்பதால் இந்த உடனடி விற்பனை அவசியம் என்றும், இதற்காக நாடாளுமன்றத்தில் அனுமதி கேட்க டைம் இல்லை, எனவேதான் அவசரக்கால சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ விளக்கம் கொடுத்திக்கிறார்.

சரி இந்த ஆயுதங்கள் யாருக்கு விற்கப்படுகிறது என்பதை கொஞ்சம் பாருங்களேன்! இஸ்ரேல், கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குதான் விற்கப்படுகிறது.

இந்த நாடுகளுக்கு இவ்வளவு ஆயுதம் எல்லாம் தேவையே இல்லை.. இந்த நாடுகள் சிவனேன்னுதான் இருந்தன. ஆனால், ஈரானை உசுப்பி, இந்த நாடுகள் மீது தாக்குதல் நடக்க வைத்து.. இப்போது பாதுகாப்புக்காக ஆயுதங்களை வாங்கிக்கொள்ளுங்கள் என்று அவர்களிடமே சொல்வதெல்லாம், பிள்ளையை கிள்ளி விட்டுவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதைதான். அப்படியே இந்த ஆயுதங்களின் லிஸ்ட்டையும் பாருங்க..

விற்பனை செய்யப்பட உள்ள ஆயுதங்களின் விவரம்

கத்தாருக்கு 4.01 பில்லியன் டாலர் மதிப்பில் (ரூ.38,059 கோடி) 'பேட்ரியாட்' (Patriot) ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு மற்றும் ₹9,418 கோடி மதிப்பில் நவீன துல்லியமான தாக்குதல் ஆயுதங்கள். குவைத் நாட்டுக்கு ₹23,727 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த போர் கட்டளை அமைப்பு. இஸ்ரேலுக்கு ₹9,418 கோடி மதிப்பில் துல்லியமான தாக்குதல் ஆயுதங்கள். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ₹1,400 கோடியில் தாக்குதல் ஆயுதங்கள் விற்றக்கப்பட உள்ளன.

இந்த ஆயுத விற்பனை பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக காசா மீது கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு மேலும் ஆயுதங்களை விற்பனை செய்வது எப்படி நியாயம்? என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

இதுல டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று சிலர் கூறி வருவது சிரிப்பை ஏற்படுத்துகிறது என்று பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+