ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடந்தது எப்படி? ஏவுகணையை வைத்தே கதையை முடித்த இந்தியா
லாகூர்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் தாக்குதல் ஒன்றை நடத்தி இருக்கிறது. புதன்கிழமை மே 7ஆம் தேதி அதிகாலை 1மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்கள் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. கடந்த முறை இதுபோல் இந்திய ராணுவம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது.

இம்முறை அதேபோல் வான் வழி தாக்குதல் நடத்தப்படும் என்று எதிர்பார்த்த பாகிஸ்தான் எல்லையோரங்களில் தங்களது நாட்டு பாதுகாப்பை தீவிர படுத்தியது. இந்த சூழலில் யாருமே எதிர்பாராத வகையில் இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்தியா எப்போது தாக்குதல் நடத்தினாலும் அதை மறுக்கும் பாகிஸ்தான் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டதை ஒப்புக் கொண்டிருக்கிறது.
இது குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்திய ராணுவம் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் பகுதியில் 3 இடங்களில் தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு, காஷ்மீர் பகுதியில் மற்றும் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு இடத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதேபோன்று பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பகவல்பூர் என்ற இடத்தில் ஒரு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவமும் பதிலடி தாக்குதலை தொடங்கி இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. ஆனால் அது தொடர்பாக எந்த ஒரு விவரத்தையும் பாகிஸ்தான் ராணுவம் வெளியிடவில்லை.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் அஹமது ஷரீஃப், இந்திய விமானப்படை சேர்ந்த எந்த விமானமும் பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழையவில்லை என்றும் ஏவுகணைகளை வைத்து இந்தியா தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் உறுதிப்படுத்தி இருக்கின்றார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள, இந்திய ராணுவம் நீதி நிலை நிறுத்தப்பட்டு விட்டதாக குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அந்நாட்டிலிருந்து பல்வேறு புகைப்பங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications