அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்.. காங்கிரஸ் மாநாட்டில் அதிரடி தீர்மானம்
அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்.. காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம்
டெல்லி: 2019 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
தற்போது டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் 84வது மாநாடு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த மாநாடு இன்று மாலையுடன் முடிவடைகிறது.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் கட்சி மாநாடு இதுவாகும். இந்த மாநாட்டில் இந்தியா முழுக்க இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
முதல் இரண்டு நாள் மாநாட்டில் முக்கியமான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
ஒரே கருத்து கொண்ட கட்சிகள் பிரச்சனைகளை மறந்து ஒன்றாக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. பாஜக கட்சியின் தொடர் வெற்றிகளை சமாளிக்க இதுவே ஒரே வழி என்று காங்கிரஸ் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
மாநாட்டில் இன்று, இன்னும் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. கடைசியாக மாநாட்டு முடிவில் ராகுல் காந்தி பேச இருக்கிறார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications