மதச்சார்பின்மையின் வல்லுனர்களாக எதிர்க்கட்சிகள் காட்டிக்கொள்கின்றன- ஓவைசி விளாசல்
அகமதாபாத்: பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமாரை கடுமையாக சாடிய அசாதுதீன் ஓவைசி, மதச்சார்பின்மையின் வல்லுனர்களாக எதிர்க்கட்சிகள் தங்களை காட்டிக்கொள்கின்றன என்றும் கூறினார்.
ஹைதராபாத் எம்.பியும் ஏ.ஐ.எம்.ஐ. எம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி குஜராத் மாநிலம் அகமதாபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
''மதச்சார்பின்மையின் வல்லுனர்களாக எதிர்க்கட்சிகள் தங்களை காட்டிக்கொள்கின்றன.

யார் வகுப்புவாதிகள்?
சிறுபான்மை சமுதாயத்தின் முன்னேற்றம் குறித்தும் அவர்களுக்கு நீதி கிடைப்பது குறித்தும் நாம் பேசினால் எங்களுக்கு எதிராக முட்டாள்தனமாக பதில் வருகிறது. தங்களை மதச்சார்பின்மை நிபுணர்கள் போல காட்டிக்கொண்டு, யார் வகுப்புவாதிகள்? யார் மதச்சர்பின்மையாளர்கள் என்று முடிவு செய்வது போலித்தனமானது. அவர்களை தேசம் பார்த்து கொண்டு இருக்கிறது'' என்றார்.

8 வயது சிறுவன் கைது
முன்னதாக இன்று காலை ஓவைசி தனது ட்விட்டர் பதிவில் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை கடுமையாக விமர்சித்து இருந்தார். ''பீகாரின் சிவன் பகுதியில் கலவரம் ஏற்பட காரணமாக இருந்ததாக கூறி 8 வயதே ஆன சிறுவனை போலீசார் கைது செய்துள்ளதாக விமர்சித்து இருந்தார். இதுதொடர்பாக ஓவைசி தனது ட்விட் பதிவில், ''புதிய 'மதச்சார்பற்ற சாச்சா' வான நிதிஷ் குமாரின் ஆட்சியில் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. கைகளை கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் சிறுவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

இழப்பீடு கொடுக்க வேண்டும்
கலவரக்காரர்களை பிடிப்பதற்கு பதிலாக இஸ்லாமிய குழந்தைகளை போலீசார் குறிவைத்து செயல்படுகிறது. இந்த சம்பவத்திற்கு காரணமான போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்'' என்றார். அடிக்கடி இடம் மாறிக்கொண்டு இருப்பதாக நிதிஷ்குமாரை மேலும் சாடிய ஓவைசி, ''பாஜகவுடன் இருந்தபோதே நிதீஷ்குமார் முதல்வரானார். கோத்ரா படுகொலையின் போது நிதீஷ் குமார் பாஜகவுடன் தான் இருந்தார்.

மம்தா பானர்ஜி
2015 ஆம் ஆண்டுதான் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறினார். மீண்டும் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டு தேர்தல்களில் பாஜக கூட்டணிக்கு திரும்பி நரேந்திர மோடி வெற்றி பெற செய்தார். தற்போது பாஜகவை கைவிட்டுள்ளார்'' என்றார். மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு கொண்டவராக அறியப்படும் மம்தா பானர்ஜியையும் ஓவைசி விமர்சனம் செய்ய தவறவில்லை. மம்தா பானர்ஜியை சாடிய ஓவைசி, ''மம்தா பானர்ஜி இதற்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பாராட்டியும் இருக்கிறார்'' என்றார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications