பணமதிப்பு நீக்கம் : நவ.8ல் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் - கருப்பு தினமாக அனுசரிப்பு
பணமதிப்பிழப்பு விவகாரத்தை கண்டித்து வரும் நவம்பர் 8ஆம் தேதி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன.
டெல்லி: பாஜக அரசுகொண்டு பணமதிப்பிழப்பு விவகாரத்தை கண்டித்து வரும் நவம்பர் 8ஆம் தேதி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. அன்றைய தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளன.
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி திடீரென இரவு பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இனி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் இனி செல்லாது என்றும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை தபால் நிலையங்களிலும், வங்கிகளும் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.

மேலும் அவற்றை மாற்றுவதற்கும் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு வங்கி வாயில்களில் காத்திருந்தனர். இதனால் பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் கண்டனம் தெரிவித்தும் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட வில்லை. மாறாக இந்த நடவடிக்கை கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக என்று மோடி தெரிவித்தார்.
இந்த பணமதிப்பிழப்பு விவகாரத்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் வரும் நவ.8ஆம் தேதியுடன் பணமதிப்பிழப்பு சம்பவம் ஏற்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது.
மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ், திரிணமூலம் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் (சரத் யாதவ்) உள்ளிட்டோர் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நவம்பர் 8ஆம் தேதியை கருப்புதினமாக அனுசரிக்கவும் எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications