நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் போராட்டம்.. ஜனநாயகப் படுகொலை என சுமித்ரா மகாஜன் ஆவேசம்
டெல்லி : நாடளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி முடக்கி வருவது ஜனநாயகத்தைப் படுககொலை செய்யும் செயல் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வேதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் இருந்தே எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு அவையை நடத்தவிடாமல் முடக்கி வைத்துள்ளனர்.

லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே மற்றும் வியாபம் ஊழல் நடைபெற்ற மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என கூறி காங்கிரஸ் உறுப்பினர்கள் கடுமையாக அவையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் .
லலித் மோடி விவகாரத்தில் நாடாளுமன்றத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முடக்கி வருவதற்கு சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இருப்பினும் நாடாளுமன்றத்தில் அமளியே நீடிக்கிறது. இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எதிர்கட்சிகளின் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஊடகத்திற்கு அவர் பேட்டியளித்தபோது கூறியதாவது..
நாடாளுமன்ற அமளி காரணமாக ஜனநாயகத்தின் மதிப்பு கெட்டு விட்டது. நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்துவது "ஜனநாயகத்தை படுகொலை செய்யும்செயல்" அனைத்து பிரச்னைகளை பற்றி விவாதிக்க அரசு தயாராக இருந்தது.
கேள்வி நேரத்தையும் ஒத்திவைக்க தயாராக இருந்தேன். மத்திய அரசு நெருக்கடி கொடுத்ததால் தான் காங்கிரஸ் எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என கூறப்படுவது தவறு
440 உறுப்பினர்களின் உரிமையானது 40-50 எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கடத்தப்படுகிறது. இவ்வாறு சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் போராடியதை நாட்டு மக்கள் காணும் விதமாக ஒளிபரப்பு செய்ய மக்களவை டி.வி.யை அவர் கேட்டுக் கொண்டார்.
பொறுப்பற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின், நடவடிக்கையை நாட்டு மக்களும் காணும் விதமாக சுமித்ரா கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications