பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: ராஜ்யசபாவில் டி.ராஜா கண்டனம்
டெல்லி: பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று ராஜ்யசபாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ராஜ்யசபாவில் இன்று பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா, இந்தியா மிகப்பெரிய நாடு. வேற்றுமைகள் அதிகம் உள்ள நாடு என்பதால் அதனை பலவீனமாக எடுத்துக்கொள்ள கூடாது. சாதகமாக எடுத்துக்கொண்டு நாட்டை வலுப்படுத்த வேண்டும். பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிப்பதை ஏற்க முடியாது. அப்படி அறிவித்தால் இதர மதங்களின் புனித நூலை அவமதிப்பதாகும் என்றார்.
இதேபோல் கேந்திர வித்யாலயாக்களில் சமஸ்கிருத திணிப்புக்கும் டி. ராஜா கண்டனம் தெரிவித்து பேசினார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்களும் பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க எதிர்ப்புத் தெரிவித்து பேசினர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications