லோக்சபாவில் மோடி பேசிய 90 நிமிட காலமும் "வெற்று உரைகளை நிறுத்துங்கள்" என கோஷமிட்ட எதிர்க்கட்சிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபாவில் இன்று 90 நிமிடங்கள் மோடி உரையாற்றிய நிலையில், அத்தனை நிமிடங்களும், எதிர்க்கட்சிகளும் அவருக்கு எதிராக கோஷமிட்டபடி இருந்தன.

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது நன்றி தெரிவித்து, உரையாற்றிய மோடி, எதிர்க்கட்சிகள் கருத்துக்களுக்கு பதில் கூறியதை விட காங்கிரசை விமர்சனம் செய்த நேரமே அதிகமாக இருந்தது.

Opposition shouting throughout the Modi speech

ஆனால் அவர் பேச்சு ஊடகங்களுக்கு கேட்க முடியாத அளவுக்கு எதிர்க்கட்சிகள் கோஷம் அதிகமாக இருந்தது. காங்கிரஸ் மட்டுமின்றி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பிக்களும் கோஷமிட்டனர்.

மோடி தனது உரையை நிறுத்தி பேசும்போதெல்லாம் எதிர்க்கட்சிகள் கோஷம்தான் பெரிதாக கேட்டது. "வெற்று பேச்சுக்களை நிறுத்துங்கள்", "வெற்று நம்பிக்கைகளை உருவாக்காதீர்கள்", "பொய்களை நிறுத்தவும்" என காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர்.

90 நிமிடங்கள் லோக்சபாவில் மோடி உரையாற்றினார். 90 நிமிடங்களும் இந்த கட்சியினர் கோஷமிட்டபடியே இருந்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
"Jhootha bhashan bandh karo", "Jhuthe ashwasan bandh karo", Jumlabazi bandh karo" and "Jhootha dialoguebazi bandh karo", shouting opposition parties.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற