மைத்ரேயனுக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்கவே டெல்லியில் ஓபிஎஸ் முகாம்.. பரபர பின்னணி
மைத்ரேயனுக்கு மத்திய அமைச்சர் பதவி தர வேண்டும் என பிரதமர் மோடியிடம் ஓபிஎஸ் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
டெல்லி: ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயனுக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்கவே டெல்லியில் அதிமுக ஓபிஎஸ் கோஷ்டி முகாமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் பாஜகவின் துணை அமைப்புகளாகிவிட்டன. பாஜக மேலிடம் என்னவெல்லாம் நினைக்கிறதோ அதை கச்சிதமாக செய்து முடிப்பதில் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன இந்த கோஷ்டிகள்.

மோடியுடன் சந்திப்பு
நாட்டின் புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு நிகழ்ச்சியை முன்வைத்து இப்போது டெல்லியில் இரு கோஷ்டிகளும் முகாமிட்டுள்ளன. ஓபிஎஸ் கோஷ்டி நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியது.

அமைச்சர் பதவி வேண்டுகோள்
இச்சந்திப்புக்குப் பின்னர் பிரதமர் மோடியை ஓபிஎஸ்ஸும் மைத்ரேயனும் தனியே சந்தித்து பேசியுள்ளனர். இதில், மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ள நிலையில் மைத்ரேயனுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

மைத்ரேயன் டெல்லி லாபி
பாஜகவை தொடர்ந்து ஆதரித்து வரும் தங்களுக்கு இது ஒரு அங்கீகாரம் தருவதாக இருக்கும் எனவும் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மைத்ரேயன் ஏற்கனவே டெல்லியில் தீவிரமான லாபியில் ஈடுபட்டு வருகிறாராம்.

எடப்பாடி கோஷ்டி அதிர்ச்சி
முறைப்படி ஓபிஎஸ்ஸை அழைத்து கோரிக்கை வைத்தும் பார்க்கலாம் என்பதால் பிரதமர் மோடியை இருவரும் தனிப்பட்ட முறையிலும் சந்தித்து பேசியிருக்கின்றனர். இத்தகவலால் எடப்பாடி கோஷ்டி அதிர்ச்சியடைந்துள்ளதாம்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்












Click it and Unblock the Notifications