ஒபிஎஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் மனுக்களின் நகல் சசிகலாவிடம் ஒப்படைப்பு
ஓபிஎஸ் தரப்பால் தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுக்களின நகல் சசிகலாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெங்களூரு: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணியில் அளித்த புகார் மனுக்களின் நகல் சசிகலாவிடம் வழங்கப்பட்டது.
அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன் உள்ளிட்ட 11 எம்.பிக்கள் கடந்த 16ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் 2 புகார் அளித்தனர். அந்த மனுக்களில் நகல்களை பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையம் மைத்ரேயனுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து அந்த 2 மனுக்களின் நகல்கள் மற்றும் அத்துடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை மைத்ரேயன் எம்.பி., பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளிடம் கொடுத்து சசிகலாவிடம் வழங்குமாறு கூறினார். அந்த மனுக்களின் நகல்கள் மற்றும் ஆவணங்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் பின்னர் அதனை சசிகலாவிடம் ஒப்படைத்தனர்.
ஓபிஎஸ் அணி புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே சசிகலாவுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ள நிலையில் தற்போது புகார் நகல்களும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications