For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்குவது சுலபம்.. தமிழர்களுக்கு அச்சம் வேண்டாம்.. கட்ஜு கருத்து

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை நிரந்தரமாக்க முடியும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

அவசர சட்டத்தையெல்லாம் நம்பி நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம், ஜல்லிக்கட்டை நடத்த விடமாட்டோம் என்று அலங்காநல்லூர் உள்ளிட்ட அனைத்து ஊர் பொதுமக்களும் ஒருசேர கூறிவிட்டனர்.

Ordinance will become a permanent law, says former SC judge Markandey Katju

இந்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வமோ, அவசர சட்டத்தை சட்டசபையில் வரும் 23ம் தேதி நிரந்தர சட்டமாக மாற்றும் வகையில் ஒரு வரைவை தாக்கல் செய்வோம் என்று கூறியுள்ளார். இதை பெரும்பான்மை மக்கள் நம்பவில்லை. சட்டம் குறித்த தெளிவு சாமானியர்களுக்கு இல்லை என்பதால், குழப்பம் நிலவி வருகிறது.

இதுகுறித்து கட்ஜு டிவிட்டரில் கூறியுள்ளது: அவசர சட்டம், தமிழக சட்டசபையில் சட்டமாக உருமாறும்போது, அது நிரந்தர சட்டமாகிவிடும். அநேகமாக விரைவிலேயே அதை அரசு செய்யப்போகிறது. எனவே பிரச்சினையில்லை என கூறியுள்ளார்.
பன்னீர்செல்வமும் இதையேதான் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

தனது மற்றொரு டிவிட்டில் தமிழர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழர்கள் வெற்றியால் மகிழ்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

English summary
Once the Ordinance is made into an Act by the Tamilnadu Legislature, as it certainly will be, it will become a permanent law. So dont worry, says former SC judge Markandey Katju.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X