பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு குடியரசு தலைவர் பாராட்டு
டெல்லி: பண மதிப்பிழப்பு மற்றும் சர்ஜிக்கல் தாக்குதல் நடவடிக்கைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2 அமர்வுகளாக நடைபெறுகிறது. இதில் முதல் அமர்வு இன்று முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்பிறகு இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு
மார்ச் மாதம் 9ம் தேதி 2வது அமர்வு தொடங்குகிறது. ஏப்ரல் 12ம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைகிறது.

நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் இது என்பதால், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உரை நிகழ்த்தினார். ஜனாதிபதி உரையில் மத்திய அரசு அதிரடி என வர்ணித்துக்கொண்ட இரு செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
பிரணாப் முகர்ஜி கூறியதாவது: கறுப்பு பணம், ஊழல், போலி ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பதற்காகவும், தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செல்வதை தடுப்பதற்காகவும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை நவம்பர் 8ம் தேதி எனது அரசு எடுத்தது.
நமது பாதுகாப்பு படைகள் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக, வெற்றிகரமாக சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தின. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications