ஹரியானாவில் அங்கீகாரம் இல்லாத 1200 தனியார் பள்ளிகள் மூடல்: அரசு உத்தரவு
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் பல வருடங்களாக மாநிலக் கல்வித்துறையின் அங்கீகாரம் இல்லாமல் நடைபெற்று வரும் 1,200க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளை ஒரு வாரத்திற்குள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வி நிர்வாக இயக்குனரான சந்தர் சேகர் தனது சமீபத்திய சுற்றறிக்கை ஒன்றில் மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு இந்த உத்தரவினை வழங்கியுள்ளார்.
இந்தப் பள்ளிகளை மூடுவதற்கு உள்ளூர் அரசு நிர்வாகம் அல்லது காவல்துறையின் உதவியையும் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பள்ளிகளில் அங்கீகாரம் பெறுவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளோ, ஊழியர்களோ இல்லாததினால் அவர்கள் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளவில்லை. இந்த நடவடிக்கை பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.
இந்தப் பள்ளிகளுக்கு முறைப்படி அங்கீகாரம் பெற்றுக்கொள்ளத் தேவையான பல வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர்கள் அதற்கு முன்வரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
கல்வி ஆண்டின் இடையில் இந்தப் பள்ளிகள் மூடப்படுவதால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் அனுமதி வழங்குமாறு மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அரசின் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
பள்ளிகளை மூடும் நடவடிக்கையால் பாதிக்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து தங்களுக்குத் தெரியவில்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறினர். இந்தப் பள்ளிகள் தங்களுடைய மாணவர்களின் எண்ணிக்கையைத் தெரிவித்ததில்லை என்பதே அதற்குக் காரணம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க வேண்டாம் என்று தாங்கள் முன்னரே பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications