For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்கு போனாலும் குவியும் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள். சிலிகான்வேலி நிகழ்ச்சிக்கு 45,000 பேர் முன்பதிவு

Google Oneindia Tamil News

வாஷிங்டன் : அமெரிக்க - இந்தியர்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்படவுள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு 45,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதற்கு முன் நியூயார்க் சதுக்கத்தில் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் முன்பதிவு செய்து கலந்து கொண்டனர்.

modi

இதே போன்று துபாயில் அண்மையில் பிரதமர் மோடி உரையைக் கேட்க 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். மேலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன் பதிவு செய்து காத்திருந்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் சிலிகான் வேலியில் அமெரிக்க - இந்தியர்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு 45,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

சான் ஜோஸ் நகரத்தில் உள்ள எஸ்ஏபி மைதானத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரதமரின் உரையை நேரடியாகக் கேட்கும் வாய்ப்பைப் பெறவிருக்கும் 18,500 பேர் கொண்ட பட்டியல் விரைவில் இறுதி செய்யப்படும் என்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வரும் மேற்குக் கடலோர அமெரிக்க -இந்தியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

English summary
over 45,000 people have signed up to listen to Prime Minister Narendra Modi's address to Indian-Americans in Silicon Valley on September 27
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X