அமைச்சரவையில் விலகினாலும் பாஜக கூட்டணியில் நீடிப்போம்.. தெலுங்குதேசம் அமைச்சர்கள் பேட்டி
மத்திய அமைச்சரவையில் இருந்து இரண்டு தெலுங்குதேசம் அமைச்சர்கள் ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.
Recommended Video

ஹைதராபாத்: மத்திய அமைச்சரவையில் ராஜினாமா செய்தது குறித்து எம்.பிக்கள் செளத்ரி மற்றும் அசோக் கஜபதி ராஜூ பேட்டி அளித்துள்ளார்கள். அமைச்சரவையில் விலகினாலும் கூட்டணியில் நீடிப்போம் என்றுள்ளனர்.
ஆந்திராவின் நீண்ட நாள் கோரிக்கையான சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு தொடர்ந்து மத்திய அரசு காலதாமதம் செய்து வந்த நிலையில், இரண்டு கட்சிகளுக்கு இடையில் பிளவு ஏற்பட்டு இருக்கிறது. சிறப்பு அந்தஸ்து தருவதில் மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேற தெலுங்கு தேசம் முடிவு செய்து இருந்தது.

இந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சரவையில் இருந்து இரண்டு தெலுங்குதேசம் அமைச்சர்கள் ராஜினாமா செய்து இருக்கிறார்கள். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் செளத்ரி மற்றும் அசோக் கஜபதி ராஜூ ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.
இவர்கள் அளித்த பேட்டியில் ''பிரதமர் இல்லத்தில் நாங்கள் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. கட்சி உத்தரவுப்படி ராஜினாமா கடிதம் கொடுத்தோம்.'' என்று விமான போக்குவரத்துறை அமைச்சராக இருந்த கஜபதி ராஜூ தெரிவித்துள்ளார்.
மேலும் ''ஆந்திர மக்களின் நலனுக்காக செயலாற்றுவேன் என்று பிரதமர் கூறினார். ஆந்திர தனி மாநில பிரிவினையின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.'' என்று அறிவியல் தொழில்நுட்ப துறை இணையமைச்சராக இருந்த செளத்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் நீடிக்கும் என்றும் அமைச்சரவையில் இருந்து மட்டும் விலகி உள்ளதாக கூறியுள்ளார்.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
தமிழகம் வந்தடைந்த கிருஷ்ணா நதி நீர்.. இரவுக்குள் பூண்டி ஏரியை அடையும்! கோடையில் சென்னைக்கு நிம்மதி -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications