"படையப்பா"வுக்கு இதே வேலைதான்.. டார்கெட் விஜயலட்சுமி அரிசி கடை.. 9-வது முறை அட்டாக்- அலறும் மூணாறு!
மூணாறு: கேரளாவின் மூணாறு பகுதியில் "படையப்பா" யானை விஜயலட்சுமி என்பவருக்கு சொந்தமான அரிசி கடையை 9-வது முறையாக தாக்கியது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் சில மாதங்களுக்கு முன்னர் அரிசி கொம்பன் என்ற அரி கொம்பன் யானை பெரும் அட்டூழியம் செய்தது. 10 பேரை மிதித்து கொன்ற அரிசி கொம்பன் தமிழ்நாட்டுக்குள்ளும் நுழைந்தது. இதனால் கம்பம் நகரில் 144 தடை உத்தரவு போடும் நிலைமை வந்தது. ஒருவழியாக அரிசி கொம்பன் பிடிகப்பட்டு களக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது.

அப்போது "படையப்பா" யானையும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது. மூணாறு சொக்கநாடு வனப்பகுதியில் வலம் வந்த "படையப்பா" உண்ணி மேரி என்பவரது அரிசி கடையை பதம் பார்ப்பதையே வாடிக்கையாக கொண்டிருந்தது. உண்ணி மேரியின் அரிசி கடை மீது 20 முறை தாக்குதல் நடத்தியது படையப்பா. இதன் பின்னர் படையப்பா பற்றிய பேச்சு எழவில்லை.
தற்போது மீண்டும் 'படையப்பா' சீனில் வந்துள்ளார். மூணாறு லக்காட் எஸ்டேட் பகுதியில் வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் விஜயலட்சுமி என்பவரது அரிசி கடையை துவம்சம் செய்து 2 மூட்டை அரிசியை காலி செய்துள்ளார் படையப்பா. விஜயலட்சுமி அரிசி கடை மீது படையப்பா யானை தாக்குதல் நடத்துவது 9-வது முறையாம். வீட்டை முற்றுகையிட்ட படையப்பா யானையிடம் இருந்து பின்வாசல் வழியாக குடும்பத்தினர் தப்பிச் சென்றிருக்கின்றனர். இல்லையெனில் அவர்களையும் துவம்சம் செய்திருப்பாராம் படையப்பா. அரிசி கடையை மட்டுமின்றி அப்பகுதி குடிநீர் குழாய்களையும் மிதித்து விளையாடிவிட்டு போயிருக்கிறார் படையப்பா சார்.
முன்னதாக தேவிகுளம் பகுதியில் வலம் வந்து கொண்டிருந்தார்.அதே போல கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பல மணிநேரம் அசையாமல் நின்று பொதுமக்களிடம் சேட்டையை காண்பித்து வந்தவர்தான் இந்த படையப்பா. தற்போது லக்கட் எஸ்டேட் வனப்பகுதியில் முகாமிட்டிருக்கும் 'படையப்பரை' வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனராம். 'படையப்பா' யானையின் இந்த தொடர் தாக்குதலால் லக்கட் எஸ்டேட் மக்கள் பெரும் அச்சத்திலும் பீதியிலுமாக உறைந்து போயிருக்கின்றனராம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications