எல்லையில் முற்றிய மோதல்.. பாகிஸ்தான் வீரர்களை ஓடவிட்ட இந்திய ராணுவம்.. பரபரப்பு சம்பவம்
ஜம்மு காஷ்மீர்: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இதற்கு நம் வீரர்கள் தக்க பதிலடியை கொடுத்து வருகின்றனர். இதற்கிடையே தான் நம் வீரர்களின் பதிலடியை தாங்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தங்களின் நிலைகளை கைவிட்டு பாகிஸ்தான் கொடியை தூக்கி கொண்டு ஓடிய பரபரப்பு சம்பவம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கடந்த 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மொத்தம் 26 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டென்ட் ஃப்ரண்ட்' என்ற பயங்கரவாத அமைப்பு தான் பொறுப்பேற்றுள்ளது. இது லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பாகும்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது. எல்லையில் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விரைவில் பாகிஸ்தான் மீது பதிலடி கொடுக்கப்பட உள்ளது. இதற்கிடையே தான் தற்போது காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.
எல்லை கட்டுப்பாட்டு கோடு என்பது இருநாடுகளின் எல்லைப்பகுதியாகும். இந்த கோட்டை தாண்டி பாகிஸ்தானுக்குள் இந்தியாவும், இந்தியாவுக்குள் பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் வரக்கூடாது. ஆனால் கடந்த 23ம் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நம் நாட்டின் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இதற்கு உரிய முறையில் பதிலடியை நம் ராணுவம் வழங்கி வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் என்பது அதிகரித்துள்ளது.
இப்படியான சூழலில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நம் படை வீரர்களின் வலுவான பதிலடிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் பயந்து ஓடியுள்ளனர். அதாவது எல்லையில் உள்ள ராணுவ நிலைகளில் இருந்த பாகிஸ்தான் கொடிகளை எடுத்து கொண்டு அந்த நாட்டு வீரர்கள் பின்வாங்கி உள்ளனர். இது அவர்களின் இயலாமை மற்றும் நம் படை வீரர்களை எதிர்த்து சண்டையிட அவர்கள் பயந்து இருப்பதை காட்டுகிறது.
இருப்பினும் தொடர்ந்து எல்லையில் பதற்றம் என்பது இருக்கிறது. முன்னதாக பாகிஸ்தான் ராணுவத்தினர் இருநாடுகளின் எல்லைப்பகுதியாக உள்ள நவ்ஷேரா, சுந்தர்பானி, அக்னூர், பாரமுல்லா மற்றும் குப்வாரா உள்ளிட்ட பல பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு நம் படை வீரர்கள் பதிலடி கொடுத்தனர். நேற்றைய தினம் மட்டும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் 20 இடங்களில் துப்பாக்கிச்சண்டை நடந்துள்ளது. நம் பகுதிக்குள் முன்னேறும் வகையில் அவர்கள் இந்த தாக்குதலை நடத்தினர். ஆனாலும் அது பலன் அளிக்காத நிலையில் இப்போது அவர்கள் தங்களின் நிலையில் இருந்து பின்வாங்கி உள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications