காலவரையின்றி இந்தியாவில் தங்க பாக். பாடகர் அட்னன் சமிக்கு அனுமதி
டெல்லி: இந்தியாவில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகர் அட்னன் சமிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் தான் இந்தியாவில் தங்குவதற்கு அனுமதி தர வேண்டும் என்று சமி விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று இந்த அனுமதியை இந்தியா வழங்கியுள்ளது.
இந்தத் தகவலை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு லோக்சபாவில் தெரிவித்தார். அவரை வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் நாடு கடத்துவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

46 வயதான சமி, கடந்த மே 26ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்தில் ஒரு மனுவைச் சமர்ப்பித்திருந்தார். அதில் மனிதாபிமான அடிப்படையில் தான் இந்தியாவில் தொடர்ந்து தங்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். சமி அடிப்படையில் பாகிஸ்தான் குடிமகன் ஆவார்.
இந்த கோரிக்கையைப் பரிசீலித்த மத்திய அரசு, சமி காலவரையின்றி இந்தியாவில் தங்கலாம் என அனுமதி அளித்துள்ளது.
லாகூரில் பிறந்தவரான அட்னன் சமி கான், 2001ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி விசிட்டர் விசா மூலம் இந்தியாவுக்கு வந்தார். அதன் பிறகு அவர் தொடர்ந்து இந்தியாவிலேயே தங்கியுள்ளார். தொடர்ந்து விசாவைப் புதுப்பித்து வருகிறார். ஆனால் இவரது பாஸ்போர்ட் 2010ம் ஆண்டு மே 27ம் தேதி காலாவதியானது. அதைப் புதுப்பிக்க பாகிஸ்தான் அரசு மறுத்து விட்டது. இதனால் அவர் இந்திய அரசின் உதவியை நாடினார். மனிதாபிமான அடிப்படையில் தான் தொடர்ந்து தங்க அனுமதி கோரினார். தற்போது அந்த அனுமதி தரப்பட்டுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications