For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா மாதிரி பொய்யெல்லாம் சொல்ல மாட்டோம்.. நிச்சயம் "குரங்குகளை" அடக்குவோம்.. பாகிஸ்தான்

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவுக்கு பாக்.ராணுவ மேஜர் எச்சரிக்கை- வீடியோ

    இஸ்லாமாபாத்: இந்தியா மாதிரி தாக்குதல் நடத்தாமலேயே நடத்தியதாக பொய் சொல்ல மாட்டோம். நிச்சயம் இந்த குரங்குகளை அடக்குவோம் என பாகிஸ்தான் திமிர்த்தனமான கருத்தை தெரிவித்துள்ளது.

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று அதிகாலை பாகிஸ்தானில் பாலக்கோட்டில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை வெடிப்பொருள்களை வீசி தாக்குதல் நடத்தியது.

    இதில் ஏராளமான பயங்கரவாதிகள் பலியாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் கொல்லப்பட்டார்.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    இந்த பதிலடியை இந்தியாவே கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானோ எங்கள் மீது எந்த தாக்குதலையும் இந்தியா நடத்தவில்லை என்றும் வெடிப்பொருட்களை காலி இடங்களில் மட்டுமே வீசியது என்றும் பாகிஸ்தான் சப்பைக்கட்டு கட்டியது.

    செய்தியாளர்கள் சந்திப்பு

    செய்தியாளர்கள் சந்திப்பு

    இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அது போல் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூரும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

    வெடிப்பொருட்கள்

    வெடிப்பொருட்கள்

    அப்போது அவர் கூறுகையில் இந்திய விமான படைகள் பாகிஸ்தானுக்குள் வந்தவுடனேயே எங்கள் நாட்டு விமானப் படை தக்க பதிலடி கொடுத்து விரட்டியடித்தது. அந்த பதற்றத்தில் வெடிப்பொருட்களை இந்தியா காலி இடங்களில்தான் வீசி விட்டு சென்றது.

    கொண்டாட்டம்

    கொண்டாட்டம்

    இந்திய விமான படையை பாகிஸ்தானுக்கு 3 அல்லது 4 மைல்களுக்கு முன்னதாகவே நாங்கள் விரட்டியடித்துவிட்டோம் என்றார். அப்போது செய்தியாளர் ஒருவர், இந்தியா நடத்தியதாக கூறப்படும் வான் வழித் தாக்குதலை இந்தியர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

    பரபரப்பு

    பரபரப்பு

    இந்த குரங்குகளை முறையாக ஒடுக்க முடியாதா என கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் கூறுகையில், நானும் இதே வார்த்தைகளை பயன்படுத்துகிறேன். இந்த குரங்குகளை நாங்கள் நிச்சயம் ஒடுக்குவோம். ஆனால் அவர்கள் செய்ததை போல் தாக்குதல் நடத்தியதாக பொய் கூறமாட்டோம். நிச்சயம் நாங்கள் செய்வோம். அதை ஒட்டுமொத்த பாகிஸ்தானுக்கும் உலக நாடுகளுக்கும் தெரியவரும் என்றார். இந்திய விமான படையினரை இது போல் குரங்கு என சக அதிகாரியே விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Pakistan Army Spokesperson Asif Ghafoor says that Indian Monkeys will be shut down. Let the Entire world know.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X