For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி வந்து போன ஏர்போர்ஸ் விமானத்திற்கு 1.5 லட்சம் கட்டணம்.. வசூல்ராஜாவாக மாறிய பாக். அரசு!

பாகிஸ்தானில் பிரதமர் மோடி சென்ற விமானம் நிறுத்தப்பட்டதற்கு இதுவரை 1.5 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி வந்து போன விமானத்திற்கு 1.5 லட்சம் கட்டணம் போட்ட பாகிஸ்தான்- வீடியோ

    டெல்லி: பாகிஸ்தானில் பிரதமர் மோடி சென்ற விமானம் நிறுத்தப்பட்டதற்கு இதுவரை 1.5 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு இருக்கிறது. மோடி பல்வேறு கட்டங்களில் பாகிஸ்தான் விமான நிலையங்களை பயன்படுத்தி இருக்கிறார்.

    கடந்த ஒருவருடமாக அவர் இந்தியா ஏர்போர்ஸ் விமானங்களை மட்டுமே பயன்படுத்துகிறார். இதற்கும் தனியாக கோடிக்கணக்கில் செலவாகி இருக்கிறது.

    பாகிஸ்தான் இவ்வளவு பணம் வசூலித்தது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட போது கூட பணம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது.

    கேள்வி

    கேள்வி

    லோகேஷ் பத்ரா என்ற நபர் இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதில் மோடி எத்தனை முறை வெளிநாடு செல்லும் போது பாகிஸ்தான் விமான நிலையங்களில் இறங்கி இருக்கிறார். அதற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டு இருக்கிறது என்று கேட்டுள்ளார்.

    ஏன் பாகிஸ்தான்

    ஏன் பாகிஸ்தான்

    மோடி ஆப்கானிஸ்தான், ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் பாகிஸ்தானில் இறங்கி இருக்கிறார். அதேபோல் பாகிஸ்தானுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். சில சமயங்களில் பாகிஸ்தான் அதிபரின் அழைப்பின் பேரில் சென்றுள்ளார்.

    செலவு

    செலவு

    இதன் மூலம் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்துள்ளது. மொத்தமாக 1.5 லட்சம் வரை இதற்காக பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் வாங்கி இருக்கிறது. பாதுகாப்பு துறை இந்த பணத்தை கொடுத்துள்ளது.

    மொத்தமாக

    மொத்தமாக

    மேலும் கடந்த ஒருவருடத்தில் இந்திய ராணுவத்திற்கு இதன் காரணமாக 2 கோடி வரை செலவு ஆகி இருக்கிறது. பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களை பயன்படுத்தியதற்கு கொடுக்கப்பட்ட தொகை ஆகும் இது. ஆனால் மொத்த பயண செலவு குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

    English summary
    Pakistan charged Rs 1.5 Lakh from India for Modi's stopover in their country. India has paid 2 crore for this all over the world.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X