வாகா எல்லையை மொத்தமாக மூடுகிறோம்.. இந்தியாவுடன் இனி எந்த உறவும் இல்லை.. பாகிஸ்தான் அறிவிப்பு!
Recommended Video
ஸ்ரீநகர்: இந்திய பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் வாகா எல்லையை மூடுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்து இருக்கிறது.
காஷ்மீர் பிரச்சனை தற்போது உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது. காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது.

இதனால் காஷ்மீரில் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. காஷ்மீரில் ஏற்கனவே இந்திய ராணுவம் தொடர்ந்து குவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காஷ்மீர் எல்லையில் தற்போது பதற்றம் நீடித்து வருகிறது. ஏற்கனவே இதில் இந்தியாவை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து வந்தது.காஷ்மீரில் இந்தியா எடுத்து வரும் நடவடிக்கை விதிகளுக்கு முரணானது.
ஐநாவில் இந்தியா செய்த ஒப்பந்தங்களை இந்திய அரசு தற்போது மீறி உள்ளது. பல ஒப்பந்தங்களை தற்போது இந்தியா முன்னேறி உள்ளது, என்று பாகிஸ்தான் கூறியது.மேலும், இந்தியா நேற்று பிறப்பித்த சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இல்லையென்றால் இந்தியா கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும். உடனே இந்தியா காஷ்மீரில் அனைத்து விதமான புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும், என்று கூறியது.
இந்த நிலையில் புதிய திருப்பமாக காஷ்மீர் எல்லையை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அதாவது வாகாவில் இருக்கும் எல்லையை மொத்தமாக மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இனி இந்தியாவிற்கு பஸ் போக்குவரத்து உட்பட எந்த விதமான போக்குவரத்தும் கிடையாது என்றும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
முன்னதாக இந்தியாவுடன் தூதரக மற்றும் ராஜாங்க உறவுகளை நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்தது. தற்போது வாகா எல்லையையும் மூடுவதாக அறிவித்துள்ளது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications