லைட்டை ஆஃப் பண்ணுங்க.. பாகிஸ்தான் ட்ரோன் அட்டாக்கால் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பறந்த உத்தரவு
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் திடீரென்று ட்ரோன் தாக்குதல் நடத்தியது அதனை வானிலேயே நம் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் தாக்கி அழித்தது.. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் இரவு முழுவதும் விளக்குகளை அணைத்த வைக்க அதிரடியாக உத்தரவிடப்பட்டது.
பாகிஸ்தான் மீது நம் நாடு ஏவுகணை தாக்குதலை நடத்தியது. மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தான் நம் நாட்டின் 15 நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை தொடங்கியது.

இந்த தாக்குதல் ரேடார் உள்பட வான்வெளி ஏவுகணை தடுப்பு சாதனங்கள் மூலம் நம் நாடு முறியடிக்கப்பட்டதோடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.
பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி உள்பட பல முக்கிய நகரங்களில் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் நிலைக்குலைந்து போய் உள்ளது. இதற்கிடையே தான் இன்று இரவு ஜம்மு காஷ்மீரின் அக்னூரில் திடீரென்று சைரன்கள் ஒலிக்க தொடங்கின. பாகிஸ்தான் வரிசையாக ட்ரோன்களை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலை எச்சரிக்கும் வகையில் சைரன்கள் ஒலிக்க தொடங்கின. இதையடுத்து பொதுமக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.
மேலும் உடனடியாக சுதாரித்த நம் நாடு வான்வெளி பாதுகாப்பு சிஸ்டமில் இருந்து ட்ரோன்களை அழிக்கும் நடவடிக்கையை தொடங்கியது. அதன்பிறகு பாகிஸ்தானின் ட்ரோன்களை வானில் இடைமறித்து அழித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் இந்தியாவின் ஆகாஷ் பாதுகாப்பு அமைப்பு ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ட்ரோன்களின் பாதையை கண்டறிந்து வானிலேயே அதனை வெடிக்க செய்து வருகிறது.
இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் இரவு முழுவதும் விளக்குகளை அணைத்து வைக்க அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவின் பின்னணி என்னவென்றால் இரவு நேரத்தில் விளக்குகள் எரியும்போது பாகிஸ்தானால் எளிதாக இலக்குகளை தாக்கி அழிக்க முடியும். அதேவேளையில் விளக்குகள் அணைக்கப்பட்டு இருக்கும்போது பாகிஸ்தானின் முக்கிய இலக்குகள் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். இதனால் தான் இந்த உத்தரவு என்பது பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் உள்ள விளக்குகளை அணைத்தனர். ஜம்மு காஷ்மீர் மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் விளக்குகளைஅணைத்தனர். சில இடங்களில் மின்தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications