இந்திய மீனவர்கள் 18 பேரை சிறை பிடித்தது பாகிஸ்தான் கடலோர காவல்படை
அகமதாபாத்: இந்திய மீனவர்கள் 18 பேரை பாகிஸ்தான் கடலோரக் காவல் படை கைது செய்துள்ளது. மேலும், மீனவர்கள் சென்ற 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அரபிக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 18 மீனவர்கள் மற்றும் அவர்களின் 3 படகுகளை பாகிஸ்தானின் கடல்சார் பாதுகாப்பு அமைப்பினர் பிடித்துச்சென்றதாக தேசிய மீனவர் பேரவையின் செயலாளர் மணிஷ் லோத்கரி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், குஜராத் மாநிலம் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 18 மீனவர்களை பாகிஸ்தான் கடலோரக் காவல்படையினர், திங்கள்கிழமை இரவு கைது செய்துள்ளனர். அவர்கள் சென்ற 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை கராச்சி துறைமுகத்துக்கு கொண்டு சென்று, அதன் பிறகு சிறையில் அடைத்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.
சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர் இந்திய மீனவர்களைக் கைது செய்ததாக அதே பகுதியில் இருந்த பிற மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications