இங்கிட்டு இலங்கை..அங்கிட்டு 85 மீனவர்களை கைது செய்த பாகிஸ்தான்

குஜராத் கடற்பரப்பில் மீன்பிடித்த 85 மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: வங்க கடலில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை செய்து கொண்டிருக்கிறது...இதேபோல் அரபிக் கடலில் குஜராத் மீனவர்கள் 85 பேரை கூண்டோடு கைது செய்துள்ளது பாகிஸ்தான்.

வங்க கடலில் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கைது செய்கிறது இலங்கை கடற்படை. அத்துடன் தமிழக மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்கிறது.

Pakistan Navy arrests 85 Indian fishermen

இதேபோல் குஜராத் அருகே அரபிக் கடல் பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்து வருகிறது. சில நாட்களுக்கு 13 படகுகளுடன் 70 மீனவர்களை அரபிக் கடலில் சர்வதேச கடற்பரப்பில் நுழைந்து பாகிஸ்தான் கைது செய்தது.

இதைத் தொடர்ந்து மீண்டும் 15 மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. கடந்த 7 மாதங்களில் 8-வது முறையாக பாகிஸ்தான் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தமிழக மீனவர் பிரச்சனையில் அலட்சியமாக இருக்கும் மத்திய அரசு இப்போது என்ன செய்யப் போகிறது என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+