இந்திய ராணுவத்திற்கு வழங்கும் குடிநீரில் விஷம் கலக்க பாகிஸ்தான் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
டெல்லி: இந்திய ராணுவத்திற்கு குடிநீர் வழங்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் எல்லை ஓரமுள்ள நீர் நிலைகளில் விஷத்தை கலக்க பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளது.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்து மீறலில் ஈடுபட்டு பதற்றத்தை எற்படுத்தி வருகிறது. இந்திய ராணுவம் கொடுக்கும் பதிலடியை தாக்கு பிடிக்க முடியாமல் புறமுதுகிட்டு ஓடுகிறது பாகிஸ்தான் ராணுவம்.

போர் மூலம் ஜெயிக்க முடியாது என்று நினைத்துதான் என்னவோ ராஜஸ்தான் மாநில எல்லை பகுதியின் ஜெய்சால்மர் மற்றும் பட்மெர் ஆகிய மாவட்டங்களில் விஷம் கலக்க சதி திட்டம் தீட்டியிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
எல்லையோரங்களில் உள்ள இந்த நீர் நிலைகளில் இருந்து ராணுவத்துக்கும், கிராம பகுதிகளுக்கும் நீர் விநியோகிக்கப்படுகிறது. இதன் மூலம் மிகப்பெரும் உயிரிழப்பை ஏற்படுத்த பாகிஸ்தான் சதி திட்டம் தீட்டியிருப்பதாக ராணுவ உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய - பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று தொடங்குகிறது. 13ம்தேதி வரை மொத்தம் 5 நாட்கள் வரை நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ராணுவ டைரக்டர் ஜெனரல் மஜ் ஜென் உமர்பாரூக் பர்கி தலைமையிலான 16 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொள்கிறார்கள். இந்திய குழுவுக்கு எல்லைப்பாதுகாப்பு படை தலைவர் தேவேந்திரகுமார் பதக் தலைமை தாங்குகிறார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் எல்லைக்குள் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்துவது பற்றியும், இதனால் உயிர் இழப்பு ஏற்படுவது பற்றியும் தெரிவிக்கப்படும். தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொள்ளும். மேலும் குஜராத் மாநில எல்லையில் உள்ள கட்ச் பகுதியில் நடைபெறும் கடத்தல் மற்றும் சமூக விரோத செயல்கள் பற்றியும் பாகிஸ்தான் குழுவினரிடம் தெரிவிக்கப்படும். இந்த நிலையில் இந்திய ராணுவத்திற்கு குடிநீர் வழங்கும் நீர் நிலைகளில் விஷம் கலக்க பாகிஸ்தான் திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications