எல்லையில் அத்துமீறி 6 இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பாக்.: பி.எஸ்.எப். வீரர் பலி
ஜம்மு: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நவ்கம் செக்டரில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார்.
பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது அத்துமீறி சர்வதேச எல்லைக் கோடு பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.50 மணிக்கு பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நவ்கம் செக்டரில் அமைந்துள்ள இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இதில் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் பலியானார். பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் ஜம்முவில் உள்ள ஆர்னியா செக்டரில் இருக்கும் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று மாலை 6.52 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடத்தத் துவங்கினர். அவர்கள் 7.15 மணிவரை தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.
சிறிய ரக துப்பாக்கிகளை வைத்து அவர்கள் இந்திய நிலைகள் மீது 25 முதல் 30 ரவுண்ட் தாக்கினர். இதையடுத்து இந்திய ராணுவம் அவர்களை பதிலுக்கு தாக்கியது. அதன் பிறகு பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் இரவு 7.15 மணிக்கு தாக்குதலை துவங்கினர். இதையடுத்து பதிலுக்கு இந்திய ராணுவத்தினர் தாக்கினர். இந்த மோதல் சுமார் 80 நிமிடங்கள் வரை நீடித்து ஒரு வழியாக இரவு 8.35 மணிக்கு முடிந்தது. நேற்று மட்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு காஷ்மீரில் உள்ள 6 இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
முன்னதாக பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள ஜம்மு மாவட்டத்தில் இருக்கும் ஆர்.எஸ். புரா செக்டரில் உள்ள 2 இந்திய நிலைகள் மீது கடந்த மாதம் 22ம் தேதி தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications