அப்படியே ஹமாஸ் ஸ்டைல்.. "சீக்ரெட்" மீட்டிங் வேற! இந்தியாவை தாக்க முயன்று மூக்குடைபட்ட பாகிஸ்தான்!
ஜம்மு: பாகிஸ்தான் இப்போது திடீரென எல்லையோர மாவட்டங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளைத் தாக்க பாகிஸ்தான் முயன்றாலும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பை அதை முறியடித்துவிட்டது. இந்தத் தாக்குதலைப் பார்த்தால் அது அப்படியே ஹமாஸ் ஸ்டைல் தாக்குதலைப் போலவே இருக்கிறது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில காலமாகவே பதற்றம் அதிகரித்து வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்த நிலையில், அதில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இது இந்திய ராணுவத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்பட்டது.

பாகிஸ்தான் தாக்குதல்
இதற்கிடையே இன்று இரவு திடீரென காஷ்மீர் உட்பட எல்லையில் பல மாவட்டங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இருப்பினும், இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியிருக்கிறது. தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், எல்லையில் பதற்றம் உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஹமாஸ் ஸ்டைல்
இதற்கிடையே ஜம்முவில் பல பகுதிகளைக் குறிவைத்துள்ள பாகிஸ்தான், ஹமாஸ் ஸ்டைல் தாக்குதலை நடத்தி வருகிறது தகவல் வெளியாகியுள்ளது. ஜம்முவில் இருந்து வரும் வீடியோக்களை பார்த்தால் இது நமக்குத் தெரியும். அதாவது இஸ்ரேலில் கடந்த 2023ல் அக்டோபர் மாதம் இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்தியிருந்தது. அப்போது குறுகிய நேரத்தில் அதிகப்படியான ட்ரோன்களை அனுப்பியது. சுமார் 4,300 ஏவுகணைகளை ஹமாஸ் அனுப்பித் தாக்குதல் நடத்தியிருந்தது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு அதில் பெரும்பாலான ஏவுகணைகளை வீழ்த்தியிருந்தது.
சந்திப்பு நடந்தது தெரியுமா!
இப்போது பாகிஸ்தானும் கிட்டதட்ட அதேபோல ஒரு முறையைப் பயன்படுத்தியே தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மலிவான விலை குறைந்த ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்துகிறது. பாகிஸ்தான் ராணுவம் அப்படியே ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைப் போலவே செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பிரதிநிதிகள் மற்றும் ஹமாஸ் பிரிவினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சந்தித்துப் பேசியதாகச் சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஜம்முவில் உள்ள சத்வாரி, சம்பா, ஆர்.எஸ். புரா மற்றும் ஆர்னியா துறைகளை நோக்கி பாகிஸ்தான் எட்டு ஏவுகணைகளை ஏவியது. இருப்பினும் அவை அனைத்தும் வான் பாதுகாப்பு பிரிவுகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. உதம்பூரில் பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய வான் பாதுகாப்பு இடைமறித்தபோது அங்குப் பலத்த சட்டங்கள் கேட்டன. ஜெய்சால்மரிலும் பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய வான் பாதுகாப்பு இடைமறித்தது வீழ்த்தியது.
S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு
காஷ்மீர் மீதான இந்தத் தாக்குதலை இந்தியாவின் S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தான் முறியடித்து. இந்த எஸ்400 அமைப்பு உலகின் மிகவும் மேம்பட்ட ஒரு நீண்ட தூர வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும். ரஷ்யா உருவாக்கிய இந்த எஸ் 400 பாதுகாப்பு அமைப்பால் 600 கிமீ தொலைவில் வரும் ஏவுகணை அல்லது ட்ரோன்களை கூட டிராக் செய்ய முடியும். 400 கிமீ தொலைவில் வரும் போது அதைத் தாக்கியும் அழிக்கவும் முடியும். இதன் காரணமாகவே பாகிஸ்தானின் அனைத்து ட்ரோன்களையும் இந்தியா ஈஸியாக வீழ்த்தியது.












Click it and Unblock the Notifications