மிஸ்டர் மோடி... ஆர்.எஸ்.எஸ். 'ஷாகா'வைப் போல நாடாளுமன்றத்தை நடத்த முடியாது.. ராகுல் பதிலடி!
புவனேஸ்வரம்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் 'ஷாகா' எனப்படும் பயிற்சி வகுப்புகளைப் போல நாடாளுமன்றத்தை நடத்த முடியாது என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 400 எம்.பி.க்கள் ஆதரிக்கும் திட்டங்களை காங்கிரஸ் கட்சியின் சதிகார 40 எம்.பி.க்கள் முடக்குகிறார்கள்; நாட்டின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி தடை போடுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று குற்றம்சாட்டியிருந்தார்.
Meeting the PCC Executive at Congress Bhawan in Bhubaneshwar pic.twitter.com/zIVpkEn6On
— Office of RG (@OfficeOfRG) September 11, 2015 இதற்கு பதிலளிக்கும் வகையில் ஒடிஷாவின் புவனேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் ராகுல்காந்தி நேற்று கூறியதாவது:
விவாதம் நடத்துவதற்கான கட்டமைப்புதான் நாடாளுமன்றம் என்பதை பா.ஜ.க. தலைமையிலான அரசு உணர வேண்டும். எதிர்க்கட்சிகளின் குரலையும், கருத்துகளையும் கேட்டறியாமல் எதையும் செயல்படுத்தி விட முடியாது.
நாடாளுமன்றம் செயல்பட வேண்டுமானால் விவாதம் நடைபெறுவதும் அவசியம். அதை ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களான 'ஷாகா' போன்றெல்லாம் நடத்திவிட முடியாது.
ஓர் எதிர்க்கட்சியாக தனது கருத்துகளை நாடாளுமன்றத்தில் பதிவு செய்ய காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் பா.ஜ.க. அதை அனுமதிப்பதில்லை.
சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க வேண்டுமென்றால் முறையான விவாதங்கள் நடைபெற வேண்டும். அதை முழுமையாக அமல்படுத்துவதற்கு 2 ஆண்டுகள் தேவைப்படும்.
இவ்வாறு ராகுல் கூறினார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications