"கட்டுக்கட்டாக பணம்" 14 நாள் நீதிமன்ற காவல். . சட்டர்ஜி, அர்பிதாவை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அர்பிதா முகர்ஜி மற்றும் பார்த்தா சட்டர்ஜி ஆகியோர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேற்கு வங்காள மாநிலத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் அதிகளவில் பணமோசடி நடந்ததாக முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியிடம் அமலாக்கத்துறையின் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சரான பார்த்தா சட்டர்ஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் முக்கிய இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

 கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

இதில் குறிப்பாக பார்த்தா சட்டர்ஜிக்கு தெரிந்தவருமான, நடிகையுமான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூயாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்த பணத்தை எண்ணுவதற்கு புதிதாக பணம் எந்திரம் கொண்டு வரப்பட்டு எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையில் ரூ,21 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து மறுநாளும் அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான மற்றொரு பிளாட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

 2 பேரும் கைது

2 பேரும் கைது

இந்த சோதனையின் போதும் அவரது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணங்கள் இருந்தது. இதில் ரூ29 கோடி அளவில் பணம் கைப்பற்றட்டதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர். மொத்தம் அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான இடத்தில் மட்டும் 50 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அர்பிதா முகர்ஜியையும், பார்த்தா சட்டர்ஜியையும் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

 3-ந்தேதி வரை காவல்

3-ந்தேதி வரை காவல்

இதையடுத்து பார்த்தா சாட்டர்ஜியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். தொடர்ந்து நடிகை அர்பிதா முகர்ஜியும், பார்த்தா சட்டர்ஜியும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிமன்றம் இருவருக்கும் ஆகஸ்டு 3-ந் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து இருவரும் அமலாக்கத்துறை காவலில் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் அர்பிதா முகர்ஜியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர்.

 14 நாட்கள் காவல்

14 நாட்கள் காவல்

இதற்கு, அர்பிதா முகர்ஜி பதில் கூறுகையில், ''தனது வீட்டில் கைபற்றப்பட்ட பணம் எதுவும் தன்னுடையது இல்லை. தனக்கு தெரியாமலே வீட்டில் அந்த பணம் வைக்கப்பட்டு உள்ளது'' என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகை அர்பிதா சட்டர்ஜி மற்றும் முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி ஆகிய இருவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தா சட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜி ஆகிய இருவருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+