குஜராத் லவ் ஜிகாத் சட்டத்தின் சர்ச்சைக்குரிய ஆறு பிரிவுகள்.. ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம்
அஹமதாபாத் : குஜராத் அரசு இயற்றிய "லவ் ஜிகாத்"க்கு எதிரான சட்டத்தின் குறிப்பிட்ட ஆறு பிரிவுகளை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போடப்படுவதை ஏற்க முடியாது என குஜராத் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வலுக்கட்டாயமாக மதமாற்றி அல்லது மோசடி செய்து திருமணம் நடந்தது என்பதற்கான ஆதாரங்கள் இல்லாமல் லவ் ஜிகாத் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஆசை வார்த்தை கூறியோ அல்லது ஏமாற்றியோ திருமண வயதை அடைந்தவர்களின் மதங்களுக்கிடையிலான திருமணங்களை "சட்டவிரோத மதமாற்ற நோக்கத்திற்காக திருமணங்கள் என்று அழைக்க முடியாது" என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தனி உரிமை மீறல்
முன்னதாக குஜராத் அரசு இயற்றிய லவ் ஜிகாத் 2021 சட்டம் தனிநபர்களின் தேர்வு சுதந்திரம் மற்றும் மத சுதந்திரத்தை மீறுவதாகவும், தனிநபர்களின் தனிப்பட்ட உரிமைகளை மீறுவதாகவும் உள்ளதாக ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

அரசுக்கு நோட்டீஸ்
இந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், குறிப்பிட்ட "லவ் ஜிகாத்"க்கு எதிரான சட்டத்தின் சில பிரிவுகள் ஏற்புடையதாக இல்லை எனறு மறுத்ததுடன், இந்த பிரிவுகளுடன் சட்டததை அமல்படுத்த இடைக்கால தடை விதித்துடன், விளக்கம் அளிக்குமாறு குஜராத் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சுமை புகார்தாரர்
உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள சட்டப்பிரிவான 6aவின் படி மதமாற்ற நோக்கத்திற்காக ஒரு திருமணத்தை கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், அதை இல்லை என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்று கூறுகிறது - 1872 ஆம் ஆண்டின் இந்திய சான்றுகள் சட்டத்திற்கு முரணாக, ஆதாரத்தின் சுமை புகார்தாரரின் மீது உள்ளது.

வழக்கறிஞர் விளக்கம்
ஆனால் கட்டாய மதமாற்றத்தின் விளைவாக, நடந்த மதங்களுக்கிடையேயான திருமணங்களுக்கு, தடைசெய்யப்பட்ட விதிகள் பொருந்தும் என்று வெளிப்படையாகக் கூற உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனிடையே குஜராத் அரசுக்கு ஆஜரான அட்வகேட் ஜெனரல் கமல் திரிவேதி, சில சட்ட பிரிவுகள் தவறாக புரிந்து கொள்ளப்படுவதாகவும், "மிரட்டி திருமணம் செய்தவர்கள் மட்டுமே பயப்படுகிறார்கள்" என்றும் கூறினார்.

எச்சரித்த யோகி
மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களை போல், குஜராத்தும் லவ் ஜிகாத்துக்கு எதிராக ச ட்டத்தை உருவாக்கி உள்ளது. டிசம்பரில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சௌஹான் "லவ் ஜிஹாத்" செய்பவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று கூறினார். அதற்கு முன் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்கள் சகோதரிகளின் மரியாதையுடன் விளையாடுவோரை எச்சரிக்கும் என்ற என்று லவ் ஜிகாத் சட்டத்தை அழைத்தார்.

அலகாபாத் உயர்நீதிமன்றம்
முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் நவம்பரில் அமல்படுத்தப்பட்ட "லவ் ஜிஹாத்" சட்டத்தின் படி, ஒரு முஸ்லிம் இளைஞர் மீது நடவடிக்கை பாய்ந்தது. ஆனால் விமர்சித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், குறிப்பிட்ட முஸ்லீம் இளைஞருக்கு எதிரான எஃப்.ஐ.ஆரை நீதிமன்றம் ரத்து செய்தது ,. மேலும் அந்த பெண்ணுக்கு "அவரது விருப்படி வாழ உரிமை உண்டு" என்று உயர்நீதிமன்றம் கூறியது.












Click it and Unblock the Notifications