பாஸ் ஆனா தான் என் ஆளு பேசுவா..500ஐ வச்சுகிட்டு பண்ணி விடுங்க..ஆன்சர் பேப்பரில் அலற விட்ட ஸ்டூடண்ட்ஸ்
பெங்களூர்: கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவுற்றிருக்கும் நிலையில் விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் சிலரது கோரிக்கைகள் இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. நீங்கள் என்னை பாஸ் செய்ய வைத்தால்தான் என் காதல் தொடரும் எனவும், ஒரு மாணவர் ஐநூறு ரூபாய் பணத்தை விடைத்தாளில் வைத்து டீ செலவுக்கு வச்சுக்கோங்க.. பாஸ் பண்ணி விடுங்க என கேட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சிலபஸ் போல ஒவ்வொரு மாநிலத்திற்கும் பல கல்வி திட்டங்கள் இருக்கிறது. அதே நேரத்தில் 10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் பொது தேர்வுகளாக நடத்தப்படுகிறது. இதில் கிடைக்கும் முடிவுகள் தான் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
ஆனால் சிலர் இன்னும் ஒன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு தேர்வுகளைப் போலவே பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளையும் எதிர்கொண்டு வருகிறார்கள் போல.. அப்படித்தான் நடந்திருக்கிறது கர்நாடக மாநில மாணவர்கள் சிலரின் ஆன்சர் பேப்பரை பார்க்கும் போது..

சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது விடைத்தாள்களை திருத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. விரைவில் அதன் முடிவுகளும் வெளியாக உள்ளன. இந்த நிலையில் கர்நாடக மாநில மாணவர்கள் சிலரின் செயல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. அதில் சில மாணவர்கள் தன்னை எப்படியாவது தேர்வில் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு அந்த விடைத்தாளில் 500 ரூபாய் தாளை இணைத்து வைத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சிகோடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாளை திருத்திக் கொண்டிருந்த ஆசிரியர் தான் இதை கண்டுபிடித்திருக்கிறார்கள். சுவாரஸ்யமாக ஒரு மாணவர் தனது காதலை இணைத்து கோரிக்கை வைத்திருக்கிறார். "தயவு செய்து என்னை தேர்ச்சி பெறச் செய்யுங்கள். என் காதல் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. நான் தேர்ச்சி பெற்றால் மட்டுமே என் காதலை தொடர முடியும்" எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இன்னொரு மாணவர், 500 ரூபாய் தாளை விடைத்தாளில் வைத்து "டீ குடித்துக் கொள்ளுங்கள். தயவு செய்து என்னை பாஸ் ஆக்கி விடுங்கள்" என கோரிக்கை விடுத்திருக்கிறார். மற்றொருவரோ "நீங்கள் என்னை தேர்ச்சி பெற வைத்தால் நான் உங்களுக்கு பணம் தருகிறேன்" என்றும், இன்னொரு மாணவர் "நீங்கள் என்னை தேர்ச்சி பெற வைக்கவில்லை என்றால் என் பெற்றோர் என்னை காலேஜுக்கு அனுப்ப மாட்டார்கள். என்னுடைய எதிர்காலம் இந்த தேர்ச்சியில் தான் உள்ளது" என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். தற்போது மாணவர்களின் விடைத்தாள்களும் அவர்களது கோரிக்கையும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
சர்ப்ரைஸ் ஆய்வில் ஷாக்கான அமைச்சர்.. அன்னூர் சமூக நீதி விடுதியின் அவலம்! -
ராமநாதபுரம் கருப்பூர் அரசு பள்ளியில் இப்படியும் ஒரு சம்பவம்.. பொதுமக்களை அதிர வைத்த புகைப்படம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications